வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: புரியாத காதல்

Monday, November 30, 2009

புரியாத காதல்


நீ எனக்கு யாதுமாகி
இருப்பாய் என்றிருந்தேன்...
யாரோ மாதிரி
அல்லவா இருக்கிறாய்..?

நேற்றுவரை என்னை
சுற்றிவந்த நீ...
இன்று என்னிடம்
வராமல் சுற்றுவதேன்..?

எத்தனையோ முறை
என் இதழ் தேன்
குடித்த நீ...
இப்போது விஷம்
குடித்தது போல்
வெறுப்பதேன்..?

எத்தனையோ முறை
என் எச்சில்பட்டவை
எல்லாம் உன் வாய்ககுள்..!
என்னை எச்சிலாக்கிவிட்டு
எங்கோ சென்றுவிட்டாயே..?

நான் தடுத்தும்
நீ எடுத்துக் கொண்டாய்...
உன் மேலான
நம்பிக்கையில்
முற்றும் துறந்த
என்னைத் துறந்தாயே..?

மலருக்கு மலர் தாவும்
வண்டாக நீயில்லாமல்
மலர் தாங்கும்
காம்பாக நீயிருப்பாய்
என்றிருந்தேன்...
கனவாக்கிச் சென்றாயே..?

அனுபவத்தின் ஆழம்
புரிந்த எனக்கு
நம் காதலின் ஆழம்
புரியாமல் போனதேனோ..?

-சே.குமார்.
No comments: