வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: காத்திருக்கிறேன்

Saturday, November 21, 2009

காத்திருக்கிறேன்காதலைக் காட்டிய ஞாயிறு
கடந்து போனாலும்
நினைவெல்லாம் நீ..!

எனக்கு ஞாபகம்
இருக்கிறது...
வாசலில் மாக்கோலம்
இட்ட நீ கோலத்திற்குள்
காதல் வைத்துச் சென்றாய்..!

பார்வையாலேயே
பரிமாற்றங்கள் நடத்திய
நமக்குள் பரிபாஷைகள்
எப்போது..?

தனிமையில்
தவிப்போடு நான்...
காதல் சந்தோஷம்
மனசுக்குள்..!

உன் குரல் இப்போது
கேட்காதா..?
ஆவலாய் அலையும்
காது மடல்கள்..!

தென்றலாய் என்
இல்லம் புகுந்த நீ...
என் அன்னையிடம்
திருவிழா செல்வதாக
சொல்கிறாய்...
எனக்கு கேட்கவேண்டும்
என்பதற்காகவே
சற்று அதிக சப்தத்துடன்..!

வெளியில் வரும் நீ
வருகிறேன் என்கிறாய்
என்னிடம் கண்களால்..!

உன் கண் பேசும்
வார்த்தைகளை
வாய் பேசியிருந்தால்..!

என் நினைவுகளைக்
கலைத்தது
உன் இல்லத்தில் இருந்து
கிளம்பிய காரின் ஒலி..!

எப்போது மீண்டும்
எனக்குள் கோலமிடுவாய்..!

எதிர் நோக்கி
வீதியின் விளிம்புவரை
பார்வையை செலுத்தியபடி
காத்திருக்கிறேன்
இரண்டு ஞாயிறாக..!

-சே.குமார்
No comments: