வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: விலைமாது

Sunday, November 8, 2009

விலைமாது

மங்கிய விளக்கொளியில்
மங்கலாய் ஒரு உருவம்..!
ஆடைகளைப் பற்றிய
கவலையின்றி
பொறுக்கினாள்...
விலகிச் சென்றவன்
விட்டுச் சென்ற
சில்லறைகளை..!

உடம்புக்கு ஓய்வு
தேவைப்பட்ட போதும்
அடுத்தவனின் பசி தீர்க்க
தயாரானாள் தவிப்போடு...

வந்தவன் புதியவனா...
அறிமுகமானவானா...
யாராக இருந்தால் என்ன..?
பணமே பிரதானம்...

யோசிக்க மனமின்றி
பூஜைக்கு ரெடியானாள்...

-சே. குமார்
1 comment:

RR said...

இந்தியாவில் வேலையோ,வேலைக்கு மக்களோ தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

http://job2flourish.blogspot.com/
acadjobtn@gmail.com