வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: May 2010

Wednesday, May 19, 2010

ஊருக்குப் போறேன்..!

அன்பான நட்புககு

நாளை மாலை நாற்பது நாள் விடுமுறையில் ஊருக்குப் போகிறேன்... அதற்காக கடந்த ஒரு வாரத்தில் அலுவலக பணிகள் அதிகம் செய்து வைக்க வேண்டிய நிலை. அதனால்தான் நண்பர்களுக்கு பின்னூட்டம் இடவோ, எனது பிளாக்கில் பதிவிடவோ முடியாத சூழல். இனி நாற்பது நாட்களும் என்னால் வலைக்குள் வரமுடியுமா என்பது தெரியவில்லை. நான் விடுமுறைக்கு விண்ணப்பித்து, கிடைத்த நாள் முதல் என் வரவை நாட்காட்டியில் மே-20 என்ற இடத்தை அம்மாவிடம் காட்டஸ் சொல்லி கலர் பென்சிலால் வட்டங்கள் இட்டு காத்திருக்கும் என் தங்கம் (ஸ்ருதி). ஒரு வருடமே ஆனாலும் என் முகம் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் மழலையாய் அலைபேசியில் 'அ..ஆப்பா' என்றழைத்து முத்தமிடும் என் செல்லம் (விஷால்) , மற்றும் எனக்காக வாழும் என் அன்பு மனைவி இவர்களுடன் நாட்களை சந்தோசமாய் நிறைக்க இருப்பதால் வலைக்குள் வருவேன்... அடிக்கடி என்பது இயலாத காரியம். அப்பொழுது கண்டிப்பாக பின்னூட்டம் இடுவேன்.அதுவரை பின்னூட்டம் இடுகிறேன் என்று படுத்தவோ.... பதிவிடுகிறேன் என்று உங்களை வதைக்கவோ செய்ய மாட்டேன் என்பதால் உங்கள் சந்தோஷத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.என்னைத் தொடர்பு கொள்ள நினைக்கும் நண்பர்கள் 919659976250 என்ற எண்ணில் வெள்ளிக்கிழமை முதல் தொடர்பு கொள்ளலாம். காரைக்குடியிலும் தேவகோட்டையிலும் தான் அதிக நாட்கள் இருப்பேன் என்று நினைக்கிறேன்.பாசங்களுடன்,

சே.குமார்.
Wednesday, May 12, 2010

இனிக்காத காதல்
உப்புச் சப்பில்லாத
விஷயங்களுக்கெல்லாம்
உன்னிடம் கோபம்..?

எட்ட இருந்து ரசிக்க
எத்தனித்த இதயத்தை
கிட்ட இருந்து இம்சிக்கும்
இதயமில்லா மனிதன் நீ..!

வசதிகளைக் குறைத்து
உன்னுள் வாழக் கற்றுக்
கொண்ட எனக்கு
வாழ்க்கையில் துயரத்தை
மட்டுமே தூண்டில்
புழுவாய் தந்தவன் நீ..!

எனக்காக என்றில்லாமல்
உனக்காக மட்டுமே நானாக
இருந்த போதும்
என் நட்பு வட்டத்தையும்
நஞ்சாய் பார்ப்பவன் நீ..!

உன் சுற்றமும்
என் சுற்றாமும்
வேறல்ல என்ற எனக்குள்
சுற்றத்தை மறக்கச்
சொன்ன பாவி நீ..!

காதலை காதலிக்கத்
தெரியாத உன்னை
காதலித்த காதல் நான்..!

எனக்குள் இப்பொழுதெல்லாம்
காதலித்த தருணங்களின்
கடைசி நொடி வரை
மட்டுமே நீ நீயாக..!

காதலித்தபடியே
கடந்திருந்தலோ...
மரணித்திருந்தாலோ...
காதல் இனித்திருக்குமோ..?

-'பரிவை' சே.குமார்
Tuesday, May 4, 2010

பாழாப்போன மனசு..!எத்தனை முறை
தடுத்துப் பார்த்தாலும்
பாழாப்போன மனசு
பழசை மட்டுமே நினைக்கிறது...

உன்னில் நான் உறைந்த
காலத்தில் நீ...

உடைத்துக் கொடுத்த குச்சி...
உடைக்காமல் கொடுத்த பேனா...

உயிருடன் பிடித்துக்
கொடுத்த பொன்வண்டு...

கோவில் வாசலில் காத்திருந்து
கொடுத்த குங்குமம்...

எனக்காய் பறித்து வந்த மல்லிகை...
திருவிழாவில் வாங்கி வந்த ரிப்பன்...

நான் துயரப்பட்ட் போதெல்லாம்
துக்கம் தாங்கிய உன் மடி...

இன்னும் எத்தனையோ...
அத்தனையும் மறக்க நினைத்தேன்
என் திருமணத்தில்...

என்ன செய்ய...?
காலங்கள் கரைந்தாலும்
பாழாய்ப்போன மனசு
மட்டும் பழசை சுமந்து...

-'பரிவை' குமார்.