வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: பாழாப்போன மனசு..!

Tuesday, May 4, 2010

பாழாப்போன மனசு..!எத்தனை முறை
தடுத்துப் பார்த்தாலும்
பாழாப்போன மனசு
பழசை மட்டுமே நினைக்கிறது...

உன்னில் நான் உறைந்த
காலத்தில் நீ...

உடைத்துக் கொடுத்த குச்சி...
உடைக்காமல் கொடுத்த பேனா...

உயிருடன் பிடித்துக்
கொடுத்த பொன்வண்டு...

கோவில் வாசலில் காத்திருந்து
கொடுத்த குங்குமம்...

எனக்காய் பறித்து வந்த மல்லிகை...
திருவிழாவில் வாங்கி வந்த ரிப்பன்...

நான் துயரப்பட்ட் போதெல்லாம்
துக்கம் தாங்கிய உன் மடி...

இன்னும் எத்தனையோ...
அத்தனையும் மறக்க நினைத்தேன்
என் திருமணத்தில்...

என்ன செய்ய...?
காலங்கள் கரைந்தாலும்
பாழாய்ப்போன மனசு
மட்டும் பழசை சுமந்து...

-'பரிவை' குமார்.
17 comments:

Anonymous said...

நினைவுகள் சுகமானவை அதிலும் காதல் நினைவுகள் சோகமானதென்றாலும் பசுமையாய் என்றும் மனசை அதன் மேல் அலைபாய செய்துக் கொண்டே இருக்கச் செய்யும்...ம்ம்ம்ம் என்னையும் பின்னோக்கி செல்லப் பணித்தது கவிதை....

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு.

//அத்தனையும் மறக்க நினைத்தேன்
என் திருமணத்தில்..//

அது சரி:)!

’மனவிழி’சத்ரியன் said...

//பாழாய்ப்போன மனசு//

குமார்,

அது அப்படித்தான்.

ஹேமா said...

திருமணத்துக்கு அப்புறம் இவ்வளவு உண்மை சொல்றதுக்கே எவ்வளவு தைரியம் வேணும் சேகர்.

மனசு ஒண்ணு இல்லாமப்போகணும் மறதி என்கிற ஒண்ணுக்கு!

கமலேஷ் said...

நெடுங்கவிதைகளில் உள்ள எல்ல கவிதைகளும் ரொம்ப நல்லா இருக்கே...நான்தான் இந்த பக்கம் வராமலே இருந்திட்டனோ....பழைய ஞாபகங்களை அடக்கி கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க....வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

Priya said...

நியாபகங்கள் என்றுமே இனிமை அதிலும் காதல் நினைவுகள்....!!!
Nice one!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

Super! Good one Kumar :))

அண்ணாமலை..!! said...

நினைவுகள் நெஞ்சைக் கொல்லும்
தொடர்கதை
என்றுமே!

சே.குமார் said...

@ தமிழரசி said...
//நினைவுகள் சுகமானவை அதிலும் காதல் நினைவுகள் சோகமானதென்றாலும் பசுமையாய் என்றும் மனசை அதன் மேல் அலைபாய செய்துக் கொண்டே இருக்கச் செய்யும்...ம்ம்ம்ம் என்னையும் பின்னோக்கி செல்லப் பணித்தது கவிதை....//

உண்மைதான் சகோதரி நினைவுகள் சுகமானவை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சே.குமார் said...

@ ராமலக்ஷ்மி said...
//நல்லாயிருக்கு.

//அத்தனையும் மறக்க நினைத்தேன்
என் திருமணத்தில்..//

அது சரி:)!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

சே.குமார் said...

@ ’மனவிழி’சத்ரியன் said...
//பாழாய்ப்போன மனசு
குமார்,

அது அப்படித்தான்.//

ஆமா... சத்ரியன். நன்றி.

சே.குமார் said...

@ ஹேமா said...
//திருமணத்துக்கு அப்புறம் இவ்வளவு உண்மை சொல்றதுக்கே எவ்வளவு தைரியம் வேணும் சேகர்.

மனசு ஒண்ணு இல்லாமப்போகணும் மறதி என்கிற ஒண்ணுக்கு!//

உண்மைதான் மறக்க வேண்டியவைகளை மறக்க மனசு வேணும். நன்றி.

சே.குமார் said...

@ கமலேஷ் said...
//நெடுங்கவிதைகளில் உள்ள எல்ல கவிதைகளும் ரொம்ப நல்லா இருக்கே...நான்தான் இந்த பக்கம் வராமலே இருந்திட்டனோ....பழைய ஞாபகங்களை அடக்கி கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க....வாழ்த்துக்கள்...தொடருங்கள்...//

நன்றி கமலேஷ். அடிக்கடி வாங்க.

சே.குமார் said...

@Priya said...
//நியாபகங்கள் என்றுமே இனிமை அதிலும் காதல் நினைவுகள்....!!!
Nice one!//

நன்றி சகோதரி.

சே.குமார் said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//Super! Good one Kumar :))//

நன்றி ஷங்கர்.

சே.குமார் said...

@அண்ணாமலை..!! said...
//நினைவுகள் நெஞ்சைக் கொல்லும்
தொடர்கதை
என்றுமே!//

நன்றி சகோதரரே... வருகைக்கும் கருத்துக்கும்..!

க.பாலாசி said...

//இன்னும் எத்தனையோ...//

என்னமோ போங்க.... எத மறக்குறது... பாழாப்போன மனசுக்குத்தெரியலையே..