வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: காதலின் சுகம்

Sunday, November 15, 2009

காதலின் சுகம்கோபங்களும்
தாபங்களும்
தேங்கிய
காத்திருப்புக்குப் பின்
சந்திப்பதே
காதலின் சுகம்..!

சின்னச் சீண்டல்களும்
செல்லச் சிணுங்கல்களும்
இனிய காதலின்
சங்கீதம்..!

மணித்துளிகள்
கரைய பேசினாலும்
என்ன பேசினோம்
என்பது தெரியாதது
காதலின் சுவராஸ்யம்..!

சண்டையும்
சமாதானமும்
மாறி மாறி
வருவதே
இன்பக் காதலின்
இனிய பயணம்..!

வெயிலும்
மழையும்
வீணாய் போகாமல்
அனுபவிப்பதே
காதலின் அடையாளம்..!

என்னுயிர் நீ...
உன்னுயிர் நான்...
என்ற தாரக மந்திரமே
காதலின் இதயமாற்று
அறுவைச் சிகிச்சை..!

ஆம்...
கசப்பு இல்லா
பல்சுவையின்
பரவசம்தான்
காதல்..!

-சே.குமார்
No comments: