வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: நித்திரையை கொன்றவளே..!

Tuesday, November 24, 2009

நித்திரையை கொன்றவளே..!சித்திரையில் பூத்து
நித்திரையை கொன்றவளே..!
விழித்திரை மூடினால்
கனவுத்திரையில் நீ..!

சன்னல் திரை நீக்கி
நீ தரும் தரிசனம்...
எண்ணத்திரையில்
எழுதாத ஓவியம்..!

நீ முகத்திரை விலக்காமல்
கடந்து சென்ற போதினிலே...
என் மனத்திரை தானாக
மலர்ந்ததன் மாயமென்ன..?

உன் விழித்திரை திறந்தாலே...
வீழ்ந்திடுவர் கனவுத்திரை
நாயகிகள்..!

எத்திரை இருந்தாலும்
என்னுள் முத்திரை
பதித்தவளே..!
என் நித்திரையை
கலைத்தவளே..!

எப்போது உன்
இதயத்திரை விலக்கி
என் உயிர்த்திரையை
காப்பாய்..?

-சே.குமார்
No comments: