வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: நீ..!

Sunday, November 22, 2009

நீ..!அதிகாலை குளிரிலும்
மார்கழி மாத
மாக்கோலமாய் நீ..!

உன் கருங்கூந்தல்
அலையிலாடும்
படகாய் காற்றில்..!

பொட்டிட்ட நெற்றியோ
ரவிவர்மாவின் ஓவியமாய்..!

குளத்தில் நீந்தும்
கண்கள் தூண்டிலாய்..!

மருவற்ற நாசி
மீனாட்சி கிளியாய்..!

உதடுகளோ
அழகிய செர்ரியாய்..!

சங்கு கழுத்தில்
சதிராடும்
ஒற்றைச் சங்கிலி
தொட்டில் குழந்தையாய்..!

ஓட்டியாணம் இட்ட
ஒடியும் இடையோ
மலைச்சாரல்
ஒற்றையடி பாதையாய்..!

உன் மொத்தமும்
பித்தமாய் என்னுள்..!

நீ...
பித்தனை புத்தனாக்காமல்
பிரம்மன் ஆக்குவது
எப்போதோ..?

-சே.குமார்
No comments: