வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: பால்வினை நோய்

Tuesday, December 1, 2009

பால்வினை நோய்

கொடிது... கொடிது... பால்வினை நோய்..!
அதனினும் கொடிது...
அதனால் பாதிப்புக்குள்ளாகும் இளந்தளிர்..!!

(01-12-2009 (செவ்வாய்) உலக பால்வினை (எய்ட்ஸ்) ஒழிப்பு தினம், கட்டறுப்போம் பால்வினை நோயை... உருவாக்குவோம் பால்வினை (எய்ட்ஸ்) இல்லா உலகத்தை..!)
வெறிக்கு வரியாய்...
இச்சையின் எச்சமாய்...
உறவுக்கு வரவாய்..
தாசி கொடுக்கும்
இலவச இணைப்பு..!

***

தாகாத உறவுக்கு
கிடைத்த வெகுமானம்...
தரங்கெட்டுப் போகுமே
உன் மானம்..!

***

இனித்திரும்பா பயணத்தை
இனிதே நடத்திவைக்கும்
வேட்டைக்காரன்..!

***

நீ அலைந்து பெற்றது...
அநியாயமாய்
உனக்கு மட்டுமான
மனைவிக்கும்...
வாரிசுக்கும்..!

-சே.குமார்
4 comments:

நாஞ்சில் பிரதாப் said...

தவறான பாதையில் செல்வோருக்கு நல்ல சாட்டையடி கவிதைகள்...நன்றி திரு குமார்

சே.குமார் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..!

கமலேஷ் said...

உங்களின் கவிதை கையில்
ஒரு கசை இருக்கிறது...

நன்றாக இருக்கிறது...

சே.குமார் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..!