வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: நிறைவாய் நீ..!

Saturday, December 5, 2009

நிறைவாய் நீ..!ஒற்றை நாடியாம்
உனக்கு
ஊர் செல்கிறது
அதுதானே உன்
அழகு..!

தெற்றுப்பல்லாம்
உனக்கு
தெருவே சொல்கிறது
உன் சிரிப்பின்
அழகே அதுதானே..!

கோபக்காரியாம்
உறவு சொல்கிறது
கோபம் தானே
உன் குணத்தைக்
கூட்டும் அழகு..!

ராசியில்லாதவளாம்
வீடே சொல்கிறது
உன் ராசியின்
ராசி அறியாமல்..!

எல்லோரும் உன்னை
குறை கூறிய போதும்
என் மனதிற்குள்
நிறைவாய் நீ..!

-சே.குமார்
3 comments:

பூங்குன்றன்.வே said...

ஒருவேளை குறை இருந்தாலும் என்றுமே காதலியும்,காதலும் அழகு தான் பாஸ்.கவிதை அருமை !

கமலேஷ் said...

எல்லாவற்றயும் மறைக்கும் காதல்..
நன்றாக இருக்கிறது...

சே.குமார் said...

நன்றி பூங்குன்றன்.வே
நன்றி கமலேஷ்.

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி..!