வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: பாழ்பட்ட மனசு

Sunday, December 13, 2009

பாழ்பட்ட மனசுஒற்றை ரோஜா...
உதிரும் புன்னகை...
உறவாடும் கண்கள்...
என்று என்னை
வீழ்த்திச் சென்றவளே..!

எனக்குள் காதல்விதை
விதைத்து பயிராக்கி
பின் பாழாக்கியவளே..!

பாழ்பட்ட மனசு
பண்பட்ட போதும்
ஏனோ இன்னும்
உன் ஞாபகங்கள்
எனக்குள் முளைவிட்டுக்
கொண்டுதான் இருக்கின்றன...
முயன்றும் மறக்கமுடியவில்லை..!

-சே.குமார்
4 comments:

மோகனன் said...

பட்டய கிளப்புறீங்க நண்பா...

சே.குமார் said...

வாழ்த்துக்கு நன்றி நண்பா

கண்மணி said...

ம்ம்ம் கவிதைக்கு மட்டும்னா சரிதான்.

சே.குமார் said...

கவிதைக்கு மட்டும்தாங்க. நம்புங்க.