வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: தொடரும் பொழுதுகள் (உரையாடல் கவிதைப் போட்டிக் கவிதை)

Friday, December 18, 2009

தொடரும் பொழுதுகள் (உரையாடல் கவிதைப் போட்டிக் கவிதை)


பொழுதுகளின் புழுக்கம் மறந்து
இரவின் மடியில் நாம்...
எழுதாத ஓவியமாய்
என்னருகில் நீ..!
ஆடை துறந்து
ஆசை அணிந்து நான்..!
உனக்குள் வெட்கத்தின்
விளைச்சல்..!
எனக்குள் சந்தோஷ சாரல்..!
அணைத்த போதும்
அணைய மறுத்த
தேக நெருப்பு..!
கலந்தபின் கரைந்தது காமம்..!
தினமும் தொடர்ந்தாலும்
தீரவில்லை நமக்குள்..!
துய்ப்பிற்குப்பின்
சுகமான உறக்கம்..!
விடியலில் விழித்துக்கொண்டது
நேற்றைய சண்டையின் எச்சம்..!

-சே.குமார்
18 comments:

தர்ஷன் said...

இது திருமணமானவர்களால் மட்டும் உணரக்கூடியது என நினைக்கிறேன். வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

//அணைத்த போதும்
அணைய மறுத்த
தேக நெருப்பு..!//

மிக அழகான வரிகள்...

கவிதை அருமை...வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

அப்படி ஒன்றும் இல்லை நண்பரே..!
அனுபவம் மட்டுமே எல்லாவற்றிற்கும் தேவை என்பது எனது எண்ணமில்லை.

வாழ்த்துக்கு நன்றி.

சே.குமார் said...

நீங்கள் என் வலையில் முதல்முறை என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.

தங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

நாடோடி இலக்கியன் said...

//அணைத்த போதும்
அணைய மறுத்த
தேக நெருப்பு..!//


ரசித்தேன்.

வெற்றிபெற வாழ்த்துகள்..!

சே.குமார் said...

நன்றி இலக்கியன்.

Chandarbala.. said...

///கலந்தபின் கரைந்தது காமம்..!
தினமும் தொடர்ந்தாலும்
தீரவில்லை நமக்குள்..!
துய்ப்பிற்குப்பின்
சுகமான உறக்கம்..!
விடியலில் விழித்துக்கொண்டது
நேற்றைய சண்டையின் எச்சம்..! ////

Superb:)

சே.குமார் said...

நீங்கள் என் வலையில் முதல்முறை என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.

தங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

கமலேஷ் said...

கவிதை மிக அழகாக வந்திருக்கிறது...
வெற்றிபெற ஏன் வாழ்த்துக்கள்..

சே.குமார் said...

வாழ்த்துக்கு நன்றி.

தமிழ்ப்பறவை said...

நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்...

சே.குமார் said...

தமிழ்ப்பறவை - முதல்முறை என் வலைக்குள் நீங்கள். அதற்கு நன்றி.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

தியாவின் பேனா said...

அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

சே.குமார் said...

நன்றி தியாவின் பேனா.

எனது வலைக்குள் முதல் முறை நீங்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

பூங்குன்றன்.வே said...

//தினமும் தொடர்ந்தாலும்
தீரவில்லை நமக்குள்..!
துய்ப்பிற்குப்பின்
சுகமான உறக்கம்..!//

நல்ல ரசனையுள்ள வரிகள்.

சே.குமார் said...

வாழ்த்துக்கு நன்றி பூங்குன்றன்.வே

thenammailakshmanan said...

வெற்றிபெற வாழ்த்துகள்..!

சே.குமார் said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தோழி தேனம்மை லட்சுமணன்.