வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: சிலைகள்

Friday, December 11, 2009

சிலைகள்வாழும் மனிதர்கள்
மத்தியில் வாழ்ந்த
மனிதர்கள் சிலைகளாய்..!
உயர்ந்தவர்களுக்கான
உன்னத பதிவுதான் சிலைகள்..!

அரசாங்கம் மரம்
வளர்க்கிறதோ இல்லையோ
சாதியை குளிர்விக்க
மறவாமல் சிலை வைக்கிறது..!

கண்ணகி இருந்தாலா...?
யோசனையின் வாசலை
கட்டிப் போட்டது கையில்
சிலம்புடன் நிற்கும் சிலை..!

வள்ளுவன் எப்படி..?
சிந்திக்கவிடாமல்
தாடியுடன் சிரிக்கும் சிலை..!
இன்னும் எத்தனை சிலைகள்..!

காவிரி வந்தால் என்ன
வராவிட்டால் என்ன...
பரிமாறிக்கொள்வோம்
கவிஞர்கள் சிலையை..!

திருவாரூரில் பிறந்தாலும்
திருநெல்வேலியில் சிலை..!
எங்கு பிறந்தால் என்ன
வைக்க இடம் இருந்தால்
வானத்தில்கூட சிலை வைப்போம்..!

சிலைகளால் சிதைப்படுகிறது
சமுதாயம்..!
சேதத்தை தவிர்க்க
வலைக்குள் சிலைகள்..!

சிலைகள் அவமதிக்கப்பட்டால்
அடிபடுவது அப்பாவிகள்..!
நாட்டுக்காக வாழ்ந்த நல் மக்கள்...
சிலைகளாய் சா'தீய' கூட்டுக்குள்..!

சிலைகள் நடும்
விவசாயத்திற்கு விலங்கிடுவோம்..!
மனிதம் விதைக்கும்
விவசாயத்திற்கு உரமிடுவோம்..!

-சே.குமார்
2 comments:

பூங்குன்றன்.வே said...

//காவிரி வந்தால் என்ன
வராவிட்டால் என்ன...
பரிமாறிக்கொள்வோம்
கவிஞர்கள் சிலையை..!//

நல்ல கவிதை.அரசாங்கம் சிலை வைப்பதை விட செயலில் செய்து காட்டினால் நன்றாக இருக்கும் என்பதை சொன்னவிதம் நன்று.

சே.குமார் said...

என்ன செய்ய...
சிலைகள் வைப்பதும் அதன் பிறகும் நடக்கும் சண்டைகளின் போது காவலர்களை காவல் போடுவதும்..........

ம்....... என்ன சொல்ல...

அந்த ஆதங்கம்தான் இந்தக் கவிதை..!

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..!