வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: அது..!?

Sunday, December 27, 2009

அது..!?உனக்கும் எனக்குமான
உறவில் புதிதாய் அது..!

நேற்றைய நினைவுகளை
சுமந்தபடி நான்..!
புதிய வரவின் இன்பம்
சுமந்தபடி நீ..!

என் இன்பங்கள் இறக்க
ஆரம்பிக்கும் தருணங்களில்
உன் இன்பத்தின் இசையொலி..!

உனக்குள் தேய்பிறையாய் நான்
வளர்பிறையாய் அது..!

உன் உணர்வுகளில்
என் நினைவுகளைச் சிதைத்து
வளர்ந்தது அது..!

நேற்றுவரை ஒரு கோட்டில்
இருந்த நம் உறவு
இன்றோ இரு கோடுகளாய்..!

இதுவரை நான் உன் சுவாசம்...
இன்றோ நீ அது வசம்..!

நீ தேடிய சுகம் உன்னையும்
உன் மௌனத்தால்
என்னையும் கொல்கிறது..!

எனக்குள் நீ எப்போதும்...
மீண்டும் எப்போது உனக்குள் நான்..?

உன்னோடு வாழும் அதை விடுத்து
உனக்காக வாழும்
என்னிடம் வா அன்பே..!

('அது' - மதுவாகவும் இருக்கலாம் மாதுவாகவும் இருக்கலாம்... படிப்போர் சிந்தைக்கே விட்டு விடுகிறேன்.)

-சே.குமார்
6 comments:

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு குமார்!

கவிதைகளை பத்தி பிரித்து வடிவமைத்தால் வாசிப்பவர்களின் மனசில் எளிதில் அமரும்.ரொம்ப பிடிச்சிருக்கு.

திகழ் said...

அருமை

சே.குமார் said...

நன்றி பா.ராஜாராம்.

உங்கள் கருத்துக்கு நன்றி.


நன்றி திகழ்.

kamalesh said...

மிகவும் அழகாக இருக்கிறது....வாழ்த்துக்கள்...

பலா பட்டறை said...

இன்றைக்குத்தான் உங்கள் நெடுங்கவிதைகள் படித்தேன் ...அருமை. ::))

சே.குமார் said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.