வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: உன் வரவால்...

Tuesday, December 15, 2009

உன் வரவால்...நீர்-
நிலம்-
காற்று-
வானம்-
நிலா-
உறவாடின என் கவிதையில்
உன்னைப் பார்க்கும் வரை..!

அப்பா-
அம்மா-
அண்ணன்-
அக்கா-
தங்கை-
தம்பி-
உறவு இனித்தது
நீ காதல் உறவாகும் வரை..!

சேரன்-
டேவிட்-
முகமது-
உயிரான நட்புக்குள்
உண்மை இருந்தது
நீ உயிராகும் வரை..!

சினிமா-
கிரிக்கெட்-
புத்தகம்-
பைத்தியம் எல்லாம்
உன் மேல் பைத்தியம்
ஆகும் வரை..!

குட்டிச் சுவர்-
பெட்டிக் கடை-
பொழுதுபோக்கெல்லாம்
பொழுதெல்லாம்
நீ ஆகும் வரை..!

பொங்கல்-
தீபாவளி-
திருவிழா-
வருடம் ஒருமுறை
வந்து சென்றது...
உன் வரவுக்குப்பின்
வருடமெல்லாம் வராதா..?
ஏக்கத்தை என்னுள்ளே
விதைத்துச் சென்றது..!
 
-சே.குமார்
2 comments:

கலையரசன் said...

இயல்பாய் ஒரு கவிதை...
முக்கியமா புரிஞ்சிதுங்க குமார்!!

சே.குமார் said...

நன்றி நண்பரே..!

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.