வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: கரைந்த கனவுகள்

Wednesday, December 9, 2009

கரைந்த கனவுகள்எத்தனையோ கனவுகள்
நெஞ்சுக்குள்..!
நேற்று நண்பன்
கொடுத்த பெஞ்சிலை
மறவாமல் அவனிடம்
கொடுக்க வேண்டும்..!
விமலா மிஸ்ஸிடம்
வீட்டுப்பாடம் காட்ட வேண்டும்..!
சாப்பிடும் போது எதாவது
கொடுக்கும் சாமிலிக்கு இன்று
நாம் கொடுக்க வேண்டும்..!
இன்னும் எத்தனையோ...
அத்தனையும் மறந்து
'அம்மா காப்பாத்து...'
அழுகுரலை மட்டும்
கடைசியாய் காற்றில்
கரைத்துச் சென்றது...
தண்ணீருக்குள் தாவிய பேருந்து..!

-சே.குமார்
No comments: