நீ எனக்கு இட்ட
மருதாணிக்குள்
மறைத்து வைத்தாய்
உன் காதலை..!
சாப்பிடும் போது
சாதம் இடும் சாக்கில்
உன் விரல்களால்
தொட்டுச் சென்றாய்
என் கைகளை..!
அனைத்துக் கண்களும்
தொலைக்காட்சியில்
நிலைகொண்டிருக்க
அடிக்கொரு முறை
என் மீது வீசினாய்
உன் கண்களை..!
குழந்தைகளுடன் நீ
விளையாண்ட போதும்
அவ்வப்போது
எனக்கு பரிசாய்
அனுப்பினாய்
உன் சிரிப்பை..!
அத்தை மகளாக
நீ இருந்தாலும்
இனிக்கத்தான் செய்தது
யாருக்கும் தெரியாமல்
நமக்குள் நடக்கும்
காதல் கபடி..!
-சே.குமார்
5 comments:
அத்தை மகளாக
நீ இருந்தாலும்
இனிக்கத்தான் செய்தது
யாருக்கும் தெரியாமல்
நமக்குள் நடக்கும்
காதல் கபடி..!///
காதல் கபடி மிக சுவாரசியம்!!
காதல் கபடியை ரொம்ப நல்லா விளையாடி இருக்கீங்க சார் !!! கவிதை ரசிக்கும்படி இருக்கிறது .
POONGUNDRAN2010.BLOGSPOT.COM
வலைக்குள் வந்தமைக்கு மிக்க நன்றி.
வாழ்க்கைக்கும் வாழ்த்துக்கும் நண்பர் தேவன் மாயம், நண்பர் பூங்குன்றன் வேதநாயகம்.
அடிக்கடி வாருங்கள். பூத்தூவ வேண்டும் என்றில்லை... புயலையும் வீசுங்கள்... அப்பொழுதுதான் என்னால் இன்னும் பூக்கமுடியும்.
நன்றி.
நட்புடனும் பாசத்துடனும்...
சே.குமார்.
//மருதானிக்குள்//
மருதாணிக்குள்... இது தட்டச்சுப்பிழையாயின் திருத்தவும்.. உமது பிழையாயின் திருத்திக் கொள்ளவும்...
//அடிக்கொரு முறை//
நிமிடத்திற்கு அல்லது நொடிக்கு என இருந்திருக்கலாமோ...
அடி என்பது தூரக் கணக்கு அல்லவா...
தவறாக சொல்லயிருப்பின் மன்னித்தருள்க தோழரே...
தவறு இல்லை நண்பா,
மருதானி அச்சுப்பிழை, அடிக்கொரு முறை என்பது எங்கள் பக்க பேச்சு வழக்கு.
சுட்டியமைக்கு நன்றி.
Post a Comment