வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: மழை இரவில்

Tuesday, December 8, 2009

மழை இரவில்



சோவென பெய்தமழை
சோர்வுற்ற போதினிலே...
கீதமிசைக்கும் தவளைகள்..!
'டக்... டொக்...' தாளநயத்துடன்
குடிசைக்குள் வழியும் தண்ணீர்..!
காற்றை சில்லிப்பாக்கி
உடம்பை ஆட்டிப்பார்க்கும் குளிர்..!
சாக்கடைக்குள் கலக்கும்
தெரு நீரின் சலசலப்பு..!
உறுமியபடி நீரில் நீந்தும் வாகனம்..!
கருமேகங்களுக்கிடையே
கட்டழகி நிலவின் முகம்..!
வெளிச்சக் கீற்றை
அள்ளித்தெளிக்கும் மின்னல்..!
எங்கோ பெய்யும்
மழையின் இடியோசை..!
எல்லாம் ரம்மியமாய்..!
மழையால் விழித்துக் கொண்ட
கண்களுக்குள் இருட்டு பயம்..!

-சே.குமார்




6 comments:

சிவாஜி சங்கர் said...

ரசிக்கிறீங்க....வாழ்த்துக்கள் ..

கலையரசன் said...

முக்கியமா சொல்லனுமுன்னா.. உங்க கவிதை புரியும்படி இருக்கு!

செ.சரவணக்குமார் said...

அருமை குமார்.

'பரிவை' சே.குமார் said...

நண்பர் சிவாஜி சங்கருக்கு...
ரசித்ததை ருசித்து எழுதுவதுதானே கவிதை.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..!

'பரிவை' சே.குமார் said...

நண்பர் கலையரசனுக்கு...
வணக்கம்.
//முக்கியமா சொல்லனுமுன்னா.. உங்க கவிதை புரியும்படி இருக்கு!//
புரியும்படி எழுதுவது தானே புதுக்கவிதை... இல்லையா நண்பரே..!
புரிந்தும் புரியாமல் எழுத மரபுக்கவிதை இருக்கே... நமக்கு மரபுக்கவிதை வராது நண்பரே..!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே..!

'பரிவை' சே.குமார் said...

வாங்க சரவணக்குமார்...
நிஜத்தில் நான் உங்களை சந்திக்காவிட்டாலும் தினமும் நிழலில் (வலை) சந்திக்கிறேன்.
உங்கள் எழுத்துக்கள் அருமை நண்பா.
தொடரட்டும் உங்கள் நட்பு...
நன்றி..!