வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: மறுபிறப்பு

Friday, January 15, 2010

மறுபிறப்பு



வலியோடு ஒரு இரவுப்பயணம்
அருகில் நீ அவஸ்தையாய்..!
இடிந்துபோன என் மனம் போல
வழியெங்கும் இருட்டின் வாசம்..!

எதிர்வரும் வாகனங்களின்
வெளிச்ச அருவியில்
கலங்கிய நம் கண்கள்
வெள்ளி மீன்களாய்..!

தொடரும் அவசரப் பயணத்தில்
இடை இடையே வேதனையில்
வெடிக்கும் உன் அழுகுரல்..!

காற்றைக் கிழித்துக் கொண்டு
பறக்கும் காருக்குத் தெரியவில்லை
அதற்கு முன் என் மனம்
போய்க் கொண்டிருப்பது..!

உன் விசும்பலின்
நீரோடை என் கண்ணில்...
உன் வேதனையின்
விலாசம் என் இதயத்துள்..!

துடிக்கும் உன்னுடம்
துணையாய் நான்...
இலக்கை எட்டிவிட்ட
நிம்மதி நமக்குள்..!

உன் வீறிடல்களுக்கு இடையே
புதிய உயிரின் அழுகுரல்...

மறுபிறப்பு உனக்கு மட்டுமல்ல...
இடைவிடாது துடித்த
என் இதயத்துக்கும்தான்..!

-சே.குமார்




12 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை அருமை நண்பரே..

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி பேராசிரியரே..!

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு...உழவர் தின வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி கமலேஷ்

ரிஷபன் said...

அத்தனை வரிகளும் தொட்டாலும் இந்த வரிகள் விஞ்சிக் கொண்டு..

உன் விசும்பலின்
நீரோடை என் கண்ணில்...
உன் வேதனையின்
விலாசம் என் இதயத்துள்

'பரிவை' சே.குமார் said...

நன்றி நண்பரே...
உங்களைப் போன்ற நட்பின் கருத்துக்கள் என்னை இன்னும் எழுதத் தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை நண்பரே.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரிஷபன்.

thamizhparavai said...

நண்பரே நன்றாக இருக்கிறது . வாழ்த்துக்கள்...

Paleo God said...

நானும் அனுபவிச்சிருக்கேன் நன்பரே...அருமை.:)

'பரிவை' சே.குமார் said...

தமிழ்பறவை, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

'பரிவை' சே.குமார் said...

இது கணவர்கள் அனைவரும் அறிந்த அறிய வேண்டிய வலிதான் பலா பட்டறை.

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

ஹேமா said...

தாய்மையின் வேதனையும் வலியும் தொடரும் இனிமையும்.
அருமை சேகர்.

வாழ்த்துக்கள்.இன்னும் வருவேன்.

'பரிவை' சே.குமார் said...

முதல் வருகைக்கும் முத்தான வாழ்த்துக்கள் தோழி.

அடிக்கடி வாங்க.

என் பெயர் சேகர் இல்லை சே.குமார்.