வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: எல்லாம் நானாக...

Thursday, January 28, 2010

எல்லாம் நானாக...


உன் விழிமீன்கள்
நீந்தும் தடாகத்தில்
விழுந்த என்னை
விரட்டி விரட்டிப்
பார்க்கிறாய்..!
உன் விழியில்
என் உருவம்
மறையும் வரை..!

உன் நாசித் துவாரத்தின்
நளினத்தில் என்
உயிரின் வாசனையை
உறிஞ்சிப் பார்க்கிறாய்..!
என் உயிரின் வாசம்
உன் அருகாமையில்
உலரும் வரை..!

உன் உதடுகளின்
உச்சரிப்பில் நீ
தேடும் என் பெயரின்
அலைவரிசை...
என் நினைவு
மறையும் வரை..!

உன் உயிர்த்துடிப்பின்
லப்டப்பில் மெல்லிசையாய்
என் நினைவின் நாதம்...
உயிர்த் துடிப்பின்
உயிர் தொடரும் வரை..!

எல்லாம் நானாக...
நான் வெறுமையாய்..!

-சே.குமார்.
No comments: