வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: இதுதான் உலகம்

Sunday, January 31, 2010

இதுதான் உலகம்


நேற்றுவரை மனிதராய்
இன்று பிணமாய்..!

கதறி அழும் ரத்த உறவு..!
சோகத்துடன் மற்ற உறவு..!

வந்து போகும் பழக்கங்கள்..!
வராமல் இருக்கும் எதிர்ப்புகள்..!

கொடுத்த கடன் எவ்வளவு..?
வாங்கிய கடன் எவ்வளவு..?
வகையறியாமல் வாரிசுகள்..!

பயணிக்க தயாராய் பல்லாக்கு..!
பயண இறுதியில் படுக்கைக் குழி..!
எல்லாம் முடிந்து பட்டுவாடா...

நேற்றுவரை கேட்காமல் உதவிய
மனிதம் மண்ணுக்குள்..!

பத்து ரூபாய் பணத்துக்காக
சண்டையிடுகிறார்கள்
கேட்காமல் பெற்றவர்கள்..!

-சே.குமார்
2 comments:

மீன்துள்ளியான் said...

தத்துவ கவிதை சூப்பர்

சே.குமார் said...

நன்றி மீன்துள்ளியான்.