வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: பார்வையோ பலவிதம்

Thursday, January 21, 2010

பார்வையோ பலவிதம்என்னையும் உன்னையும்
இணைத்துப் பேசியது ஊர்..!

உன் காதலி நானென்று
உறக்கச் சொன்னது நட்பு..!

எதேச்சையாய் நீ பார்த்தாலும்
என்னைப் பார்ப்பதாய் கட்டுக்கதை..!

என் பாதம் உன் பாதை
தொடர்ந்தால் பார்வையின்
பார்வையோ பலவிதம்..!

என் சிரிப்புக்கு நீ திரும்பினால்
நமக்குள் சிக்னலாம்...
சிலரின் சிக்கலில்லா வார்த்தைகள்..!

எல்லாமே அவர்கள் முடிவில்
நமக்குள் இதுவரை இல்லை
அப்படி ஒரு எண்ணம்..!

நீயும் நானும் இன்னும் நட்பாய்...
தொடரும் நட்பில் தொலையட்டும்
அவர்களின் கனவு..!

-சே.குமார்
2 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..

சே.குமார் said...

நன்றி முனைவர்.இரா.குணசீலன்.