வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: பொங்கலோ பொங்கல்...

Wednesday, January 13, 2010

பொங்கலோ பொங்கல்...புத்தரிசி பொங்கல்..
புதுப்பானை பொங்கல்...
பச்சரிசி பொங்கல்...
புதுவருடப் பொங்கல்..!

வாய்க்கால் நீரில் வளர்ந்து
செழித்த அருகம்புல்லும்
பசுமாட்டின் பசுஞ்சாணியும்
பிள்ளையாராய் கொலுவிருக்க...

செங்கரும்பும் பனங்கிழங்கும்
பக்கத்தில் வீற்றிருக்க...
பச்சரிசி பால் பானையில்
பொங்கிவர துடிக்கும் வேளை
வாயெல்லாம் பல்லாய்
வாரிசுகளோடு விவசாயி...!

எத்துணை காலம் கஷ்டப்பட்டாலும்
ஏர் பிடித்த கரத்தில்
பொங்கல் சிரிக்கும் போது
பட்ட கஷ்டம் பாலாய்..!

வறண்ட பூமியும்...
கருவேல மரமும்...
காய்ந்த வாய்க்காலுமாய்...
காலம் மாறினாலும்...
தை வந்தால் வலி போகும்...

விவசாயம் மீண்டும் பெருகட்டும்...
விவசாயி கண்ணீர் விலகட்டும்...
புதுப்பானை பொங்கல் போல்
புதுவருடம் பொங்கட்டும்...!

(வலை நட்புக்கும் தமிழ்மணம், தமிழிஷ், உலவு மற்றும் அனைத்து முகம் அறியா நட்புக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.)

-சே.குமார்.
No comments: