வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: வேம்பு..!

Monday, January 25, 2010

வேம்பு..!உழைத்த களைப்பில்
கட்டிலில் உருண்டு
படுத்த போது
தலைக்கு மேல்
தாலாட்டியது
வேம்பு..!

எத்தனை பாரம்
எனக்குள் இருந்தாலும்
வாசலில் வரும்போது
வசந்தத்தை ஊட்டி
வலியைக் குறைத்தது
வேம்பு..!

குடிசையின்
வாசலில் பகலவனை
நெருங்க விடாமல்
பார்த்துக் கொண்டது
வேம்பு..!

குடிசை வீடு ஓடானது...
ஓட்டு வீடு காரை வீடானது...
வீட்டுக்குள் படுத்து
விட்டம் பார்த்த்போது
உத்திரமாய் சிரித்தது
வேம்பு...!

-சே.குமார்
2 comments:

ரிஷபன் said...

எங்கள் ஆசிரியர் பெயர் வேம்பு! கவிதை கசக்கவில்லை.. இனித்தது..

சே.குமார் said...

உங்கள் ஆசிரியரும் கசந்திருக்கமாட்டாரே ரிஷபன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா.