வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: பாசம்

Monday, January 4, 2010

பாசம்


மாரியாயி கோவில் திருவிழா
முத நாளே வந்துறனும்...
மகளின் அழைப்புக்கு
வயலிலிருந்து திரும்பா
கணவனை வசைபாடியபடி
தயாரானது தாய்மனம்..!

தட்டிக் கதவு திறக்கும்
ஓசைக்கு எட்டிப் பார்த்தவள்
இந்நேரம் என்ன செஞ்சே...
நேரத்தில போகவேணா...
விரசா கிளம்புய்யா என்றா..!

ஆங்... தண்ணியடச்சு
விட்டதுல நாழியாயிருச்சு...
இந்தா கிளம்பிட்டேன்...
என்றவரின் மனசுக்குள்
ஆறிப்போனது காபி ஞாபகம்..!

மிளகாய்... மல்லி...
அரிசி... பயறு...
கடலை... கோதுமை...
வளர்த்த வெடக்கோழி...

எல்லாம் மகளுக்கு...
எடுத்து வைக்கும் போது
சேர்த்து வச்ச சிருவாட்டுக்
காசும் சேர்ந்து கொண்டது..!

இருப்பதில் நல்லதாய்
தேடிக்கட்டிய சேலையும்...
நேற்று மாற்றிய மஞ்சக்கயிறும்...
செம்மண் படர்ந்த தலையும்
அழுக்கேறிய கால்களும்
வெள்ளையறியா வேட்டியுமாய்...
மக வீடு நோக்கி...

சொந்தங்கள் எல்லாம் கூட்டமாய்...
மக வீடு கலகலப்பாய்...

'இப்பத்தான் வந்தீங்களா...?'
ஓடி வருவாள் மகள்
இருமணமும் ஒன்றாய் நினைக்க...

'இப்படித்தான் வருவீங்களா...?'
மகளின் குரலில் கரைந்தது பாசம்..!

-சே.குமார்




4 comments:

sarvan said...

உங்கள் நடை வெகு சிறப்பு!

'பரிவை' சே.குமார் said...

முதல்முறை என் தளத்தில் நீங்கள்.

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

அடிக்கடி வாங்க.

கமலேஷ் said...

பாசத்தின் வெளிப்பாடு மிக நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்..

பூங்குன்றன்.வே said...

நல்லா இருக்கு நண்பரே..