வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: அனுபவிக்க ஆசை

Tuesday, January 19, 2010

அனுபவிக்க ஆசைவாகன இரைச்சலின்றி
அமைதியாய் விடியும்
அழகிய காலை..!

விடியலுக்கு முன்னே
விண்ணைத் தட்டும்
சேவல்களின் கூவல்கள்..!

பால் குடிக்க கன்றை
அழைக்கும் பசுக்கள்..!
கோலமிடும் குமரிகள்..!

வயல்களுக்கு இடையே
விழித்து வரும் சூரியன்..!

பக்கத்து வீட்டிலிருந்து
கேட்கும் சுப்ரபாதம்..!

இரைதேடி இலக்கு
நோக்கிச் செல்லும் பறவைகள்..!

வயலுக்குச் செல்லும் ஆண்கள்..!
எருக்கூடையுடன் பெண்கள்..!

நீர் நிறைந்த கண்மாய்..!
நீர் பாய்ந்தோடும் வாய்க்கால்கள்..!
காற்றுக்கு தலையசைக்கும் பயிர்கள்..!

எல்லாம் அனுபவிக்க ஆசை..!
என்ன செய்ய...

இயந்திரமாகிவிட்ட உலகில்
சிக்கிவிட்டதே என் கிராமம்..!

-சே.குமார்
No comments: