வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: கடைசி நிமிட பரபரப்பு..!

Wednesday, October 14, 2009

கடைசி நிமிட பரபரப்பு..!

ஓடும் நினைவுகளை
மருட்சியோடு
நினைவுபடுத்தும்
கண்கள்..!

மூச்சின் சுகத்தை
உணரவைக்கும்
நாசி..!

எதாவது கிடைக்குமா?
தேடலில் உதடு
தடவும் நாக்கு..!

துடிப்பின் துடிப்போடு
தடுமாறும் இதயம்..!

ஒட்டிப்போனாலும்
ரொட்டித்துண்டாவது
உள்ளே வராதா..?
ஏக்கத்தில் வயிறு..!

பற்றிக்கொள்ள
ஏதாவது கிடைக்குமா..?
பரபரக்கும் கைகள்..!

ஓடி ஓடி உழைத்ததால்
சோர்ந்து போயிருந்தாலும்
எங்காவது போகத்துடிக்கும்
கால்கள்..!

எல்லாவற்றின் பரபரப்பும்
வர இருக்கும்
அந்த கடைசி
நிமிடத்தை நோக்கி..!


-சே.குமார்
No comments: