வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: நினைவுகள்

Saturday, October 31, 2009

நினைவுகள்

கணக்கிலடங்கா நினைவுகளில்
துல்லியமாய்
உன் நினைவுகள்..!

கற்பனையின்
கதைக்கருவை
உன் நினைவுகள்
என் நெஞ்சினுள்
நிகழ்வுகளாய்..!

மறக்கமுடியாத
செயல்களில்
மறுக்க முடியாமல்
உன் நினைவுகள்..!

நினைவுகள்
நிச்சயமற்றவைதான்..!
உன்
நினைவுகளைத் தவிர..!

என் விடியலின்
ஆரம்பமே...
உன் நினைவுகளோடுதான்...
என்பது உனக்குத்
தெரியுமா...?

-சே.குமார்
No comments: