வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: குட்டித் தேவதை

Saturday, October 31, 2009

குட்டித் தேவதைவேசங்களில்லா பாசத்திலும்...
சொல்லத்தெரியா நேசத்திலும்...
எனக்கு முன்னோடி நீ..!

சொற்களை சொல்லாத
மழலை மொழியில்
கொஞ்சிப் பேசும்
சொன்னதை சொல்லாத
கிளிப்பிள்ளை நீ..!

உன் சுட்டித்தனங்கள்
மற்றவர்களுக்கு
வேப்ப எண்ணையில்
தோய்த்த பாகற்க்காயாக
இருந்தாலும்...
எங்களுக்கோ
தேனில் நனைத்த
பலாச்சுளை போல...

உன் சேஷ்டைகள்
சில நேரம்
சிரிக்க வைத்தாலும்
பல நேரம்
சிந்திக்க வைத்துள்ளது
என்பதே நிதர்சனம்..!

மானாக...
மயிலாக...
குயிலாக...
எப்படி நடந்துகொண்டாலும்
என் இதயத்துடிப்பின்
இருப்பிடமே நீதான்..!

பிரச்சினைகளில்
நான் தவித்த போது
உன் பிஞ்சு விரல்களே
என் நெஞ்சுக்கு ஆதரவு..!

சொந்தங்கள் சூழ
இன்று உனக்கு
பிறந்தநாள் கொண்டாட்டம்..!

உன்னருகே நானில்லா
வருத்தம் எனக்கு..!
நானில்லா வருத்தம்
வேண்டாம் உனக்கு..!

தூரமிருந்தாலும்
தூரமின்றி
வழ்த்துகிறேன் அன்பு மகளே..!


(எனது உயிர், என் குட்டித் தேவதை, என் மகள் ஸ்ருதியின் பிறந்தநாள் அன்று என்னால் போகமுடியாத தருணத்தில் இரவு நேர தனிமையில் கண்ணீருடன் எழுதியது.)

-சே.குமார்
2 comments:

மோகனன் said...

அன்பு நண்பா...

உன் கண்ணீரைக் காவியமாக்கியிருக்கிறாய்...

கவலை வேண்டாம்..நீ தூரத்திலிருப்பது நின் மகள் எதிர்காலத்தில் தொல்லையின்றி வாழத்தானே...

எனது அன்பு வாழ்த்துக்களை உன் மகளுக்கு உன்னோடு சேர்ந்து நானும் தெரிவித்துக் கொள்கிறேன்...

வருந்தாதே... வசந்தம் என்றும் உன் பக்கமே...

சே.குமார் said...

வாழ்த்துக்கு நன்றி நண்பா.

என்ன செய்ய வெளிநாட்டு வேலை பணம் கொடுத்தாலும் பெரும்பாலான இரவுகள் வேதனை நிறைந்தவைகள் தான் நண்பா.