வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: நடை பிணம்

Monday, October 26, 2009

நடை பிணம்

அழத் தெரியாமல் நீயும்...
அழுவது தெரியாமல் நானும்...
அருகருகே..!

ஆறுதலாய் பற்றிக்கொள்ள
கைகள் துடித்த போதும்
மனசு மறுத்தது..!

அதே நிலைமைதான்
உன்னுள்ளும் என்பதை
பறைசாற்றின பரபரத்த
உன் கைகள்..!

உன் நலம் விசாரிக்க
நா துடித்தது...
என் நலம் விசாரிக்க
உன் நா துடிப்பதை
உணர்த்தின
உலர்ந்த உதடுகள்..!

இருந்தும் வாய் பேச
முடியாமல்
உணர்ச்சிகளற்று
பிணங்களாய் ..!

உறவினரின் திருமண
விழாவில் புதிய
உறவுகளோடு நாம்..!

-சே.குமார்
1 comment:

Ganesan said...

நன்று... மிக நன்று... அடிக்கடி எழுதிங்கள் தோழரே...