வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: எங்கள் ஊர்

Tuesday, October 20, 2009

எங்கள் ஊர்இயற்கை அன்னை
அரவணைப்பில்
பசுமை நிறைந்தது
எங்கள் ஊர் என
பொய்யுரைக்க மனமில்லை..!

ஒரு காலத்தில்
பசுமையோடு
இருந்த இடம்
இன்று பாலைவனமாய்..!

கருவேல மரங்களின்
கட்டுப்பாட்டிற்குள்
விளை நிலங்கள்..!

மழையின் போது
நிறைமாத கர்ப்பிணியாகும்
கண்மாயில்
பாசிகளின் பவனியால்
மனிதர்கள் நனைவதில்லை..!

குடிநீர்க் குளமோ
தாகமெடுத்தால்
தண்ணீர் தேடும்
அவல நிலையில்..!

பராமரிப்பின்றி
பாவமாய்
ஊர்க்காவல் தெய்வம்..!

வீட்டுக் கொன்றாய்
வாழ்ந்த மனிதர்கள்..!
வருடம் ஒருமுறை
எட்டிப்பார்க்கும் வாரிசுகள்..!

எது எப்படியோ
இன்னும் உயிர்ப்புடன்
அடி வாங்கி
தண்ணீர் கொடுக்கும்
அடி குழாய்..!
 
-சே.குமார்
No comments: