வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: காதலா... காமமா...

Wednesday, September 23, 2009

காதலா... காமமா...
தனிமையில் நாம்...
விழித்துக்கொண்ட
காமத்தை விரட்டும்
வழி தெரியாமல்...

ஏதேதோ பிதற்றியபடி
உன் கரம் பற்ற...
படக்கென்று பறிக்கிறாய்
படபடப்போடு..!

சிறிது நேர
மௌனத்தின் முடிவில்...
காற்றில் அலையும்
உன் கேசத்தால்
உயிர் பெற்றது காமம்..!

யோசனையின் முடிவில்
தோளில் கை போட்டு
இழுத்து அணைக்க...

பருந்திடம் மாட்டிய
கோழிக் குஞ்சாய்
பதறித் தள்ளினாய்...

இருவரும்
மௌனத்தோடு...
கரைந்த நிமிடங்களில்
கலைந்தது காமம்..!

காதல் காமத்தால்
அழிந்து விடுமோ
மனது யோசிக்க...
காதல் ஜெயித்தது...

பேசாமல் கிளம்பிய
என் கரம் பற்றி
நீ கொடுத்த முத்தத்தில்
கரைந்தது காமம்...
நிறைந்தது காதல்..!

-சே.குமார், பரியன் வயல்.
1 comment:

Ganesan said...

நன்று தோழா... நன்று...

என்றென்றும் அன்புடன்

மோகனன்
http://tamilkkavithai.blogspot.com
http://tamilgana.blogspot.com
http://vasanakavithai.blogspot.com