வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: ரசிகனாய்..!

Monday, April 5, 2010

ரசிகனாய்..!



உன் ஒவ்வொரு அசைவையும்
அணுஅணுவாய் ரசிக்கும் ரசிகனாய்..!

நீ கோலமிடும்போது
நெற்றியில் விழும் கற்றை
முடியை மணிக்கட்டால்
தள்ளிவிடும் பாங்கு..!

குளித்து நீ திரும்புகையில்
உன் கழுத்தில் ஜொலிக்கும்
நீர்த்திவளைகள்..!

உன் கால்களின் நர்த்தனத்தில்
நளினமாய் இசைக்கும் கொலுசொலி..!

தோழிகளின் பவனியில்
குதூகல சிரிப்புக்கு இடையே
தனித்து ஒலிக்கும் சிரிப்பு..!

தலையில் ஆடும்போது
தரையில் விழுமோ என
பயத்தை விதைக்கும் ரோஜா..!

அடிக்கடி அலைந்து
அங்கும் இங்கும் ஓடி
என்மேல் நிலைக்கும்
உன் கண்கள்..!

அனைத்தையும் ரசிக்கும்
ரசிகனாய் நான்..!


-'பரியன் வயல்' சே.குமார்.




7 comments:

க.பாலாசி said...

-//அனைத்தையும் ரசிக்கும்
ரசிகனாய் நான்..!//

நீங்க மட்டுமில்ல... காதலிக்கிற எல்லாருமே ரசித்தே ஆகவேண்டிய அழகு...

கவிதை ரசனைக்குறியது....

Paleo God said...

தலையில் ஆடும்போது
தரையில் விழுமோ என
பயத்தை விதைக்கும் ரோஜா..!
//

அருமை குமார்..:)

Anonymous said...

good observation sekar.......வீட்டுக்கு தெரியுமா? விஷயம்....

'பரிவை' சே.குமார் said...

@ க.பாலாசி
// நீங்க மட்டுமில்ல... காதலிக்கிற எல்லாருமே ரசித்தே ஆகவேண்டிய அழகு...
கவிதை ரசனைக்குறியது....//

நன்றி நண்பரே... வருகைக்கும் கருத்திற்கும்...
வலைச்சரத்தில் கலக்குங்க..!

'பரிவை' சே.குமார் said...

@【♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║
// அருமை குமார்..:)//

நன்றி ஷங்கர்.

'பரிவை' சே.குமார் said...

@தமிழரசி
// good observation sekar.......வீட்டுக்கு தெரியுமா? விஷயம்....//

என்னை சேகர் என்றே அழைப்பது ஏனோ... நான் குமார்.
ஏதோ கவிதையின்னு எழுதினா குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணீருவீங்க போலவே... தாயீ..!

சத்ரியன் said...

//கோலமிடும்போது
நெற்றியில் விழும் கற்றை
முடியை மணிக்கட்டால்
தள்ளிவிடும் பாங்கு..!//

சே.குமார்,

செய்கைகளையே கவிதையா செதுக்குறீங்களே சாமி...!