வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: எங்க போறே...?

Wednesday, March 31, 2010

எங்க போறே...?என்ன தாத்தா கோவமாப் போறே..?
ஒண்ணுமில்லடி ராசாத்தி...

இப்படித்தான் பாட்டி போனப்போ
நீ ஒண்ணுமில்லன்னு சொன்னே
பாட்டி இன்னும் வரலை...

நீயும் ஒண்ணுமில்லன்னு சொல்றே...
அப்ப நீயும்.... வாயைப் பொத்தி
மடியில் அமர்த்தி...

பாட்டி போனாங்கள்ல
அவங்களைத்தான்
பார்க்கப் போறேன்...

நானும் வாரேன்...

ரொம்பத்தூரம் போகணும்
தாத்தா பாத்துட்டு வந்துடுறேன்...

சீக்கிரமா பார்த்துட்டு வா...
எங்கிட்ட கூட்டிக்கிட்டு வா...

ராத்திரியாச்சின்னா வராதே...
பேயெல்லாம் வருமாம்...

சரிடி என் செல்லம்...
துண்டை தோளில் போட்டுக்
கொண்டு மனைவியை புதைத்த
இடம் நோக்கி நடந்தார்...

சில வார்த்தைகள் பேசி
மனபாரத்தை குறைக்க..!

-'பரியன் வயல்' சே.குமார்

படத்துக்கு நன்றி : வண்ணத்துப்பூச்சி சினிமா குழுவிற்கு


7 comments:

ராமலக்ஷ்மி said...

//சில வார்த்தைகள் பேசி
மனபாரத்தை குறைக்க..!//

வாசிப்பவர் மனதில் பாரத்தை ஏற்றி விட்டீர்கள். நல்ல கவிதை.

துபாய் ராஜா said...

நெகிழ்ச்சியான பதிவு. பொருத்தமான படம்.

சே.குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலெட்சுமி

சே.குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துபாய் ராஜா.

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

சே.குமார் said...

nanri thalaivan.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு குமார்!

படமும்.

குட்டீசின் படங்கள் கூட மிக அழகு.வரைந்தது போல் இருப்பது,fantastic!