வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: டைரியும்... மனைவியும்...

Saturday, March 20, 2010

டைரியும்... மனைவியும்...

எனக்காக எழுதிய டைரிக்குறிப்புகள்
இன்று உன் நாவில் முள்ளாய்..!

படிக்கும் காலத்தில் வந்த காதல்
பந்தாடப்படுகிறது உன் நாவில்..!

எல்லாம் உன்னிடம் சொன்ன நான்
எதைச் சொல்ல மறந்தேன்..?

காதல் என்பது கருக்கொலையல்லவே...
வாலிபத்தில் வரும் வசந்தம்தானே..!

எனக்கும் அவளுக்குமான நட்பில்
ஊடலும் கூடலும் பருவத்தின் நாடகமே..!

காதலித்ததற்கு எப்படி காரணம் இல்லையோ
அதுபோல பிரிவிற்கும் காரணம் இல்லை..!

எனது டைரியில் இருக்கும் எல்லாம்
எனக்குள் ரகசியமானவை மட்டுமே..!

அவற்றைப் படித்துவிட்டு
என் இதயத்தைக் கிழிப்பது ஏனோ..?

ஒவ்வொரு இரவிலும் தொடரும் பகலிலும்
வார்த்தைகளால் கொல்கிறாயே ஏனடி..!

என்னைக் கொல்லாமல் இருக்க எழுதிய டைரி
கொல்லாமல் கொல்கிறது உன் பேனாமுனை பேச்சில்..!

நான் மறந்த காதலை நீ மீண்டும்
என்னுள் மலரச் செய்ய்த் துடிக்கிறாய்..!

வேண்டாம் பெண்ணே..!
தொலைந்த பொழுதுகளைக் கொண்டு
வரும் பொழுதுகளை தொலைக்க நினைக்காதே..!


-'பரியன் வயல்' சே.குமார்
3 comments:

சத்ரியன் said...

//வேண்டாம் பெண்ணே..!
தொலைந்த பொழுதுகளைக் கொண்டு
வரும் பொழுதுகளை தொலைக்க நினைக்காதே..!//

குமார்,

ம்ம்ம்ம்ம்.... ரகசிய அறைக்குள் பொத்தி வைத்திருக்க வேண்டியதை, வரிசைப் படுத்தி “டைரி”-யில் கொட்டி வைத்து விட்டு, இப்போ “கொட்டுதே” என்றால் எப்படி?

இதுவும் கூட சமூகப்பார்வை கவிதை தான் நண்பர்களே.

சே.குமார் said...

சத்ரியன்,

தலைவா இது கவிதை... குடும்பத்துக்குள்ள குழப்பத்தை ஏற்படுத்தீராதீங்க.

நண்பா, எனக்கு டைரி எழுதும் பழக்கமும் இல்லை. என் மனைவிக்கு சந்தேகக் கண்ணும் இல்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா.

vidivelli said...

ஆகா அருமை அருமை
அழகிய கவிதை
அத்தனையும் அழகு...
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு....