வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: சித்திரை...

Tuesday, April 13, 2010

சித்திரை...தமிழ் வருடத் தலைமகளே...
தமிழர்களின் பொன்மகளே...
அரசாணையால் உனக்கு
சிறையிட்ட போதினிலும்...
அத்'தை' மகளை
அரியாசனத்தில் அமர
வைத்த போதினிலும்...
தத்'தை' மகளாம் நீ
என்றும் எங்கள்
முதல் மகளே...!

என் நட்புக்கும் பாசமலர்களுக்கும் தமிழ் புத்தாண்டு / சித்திரை முதல் நாள்
வாழ்த்துக்கள்.

-'பரியன் வயல்' சே.குமார்.
9 comments:

சத்ரியன் said...

சே.குமார்,

இனிய கவிதை.

நண்பனின் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ராமலக்ஷ்மி said...

//அரசாணையால் உனக்கு
சிறையிட்ட போதினிலும்...//

:)! ஆனாலும் நாம் இத்தனை வருடம் அனுசரித்த வழக்கத்தை எளிதில் மாற்றிட முடியுமா என்ன?

இனிய ‘புத்தாண்டு’ வாழ்த்துக்கள்!

தமிழரசி said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சேகர்..

சரவணகுமார் said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்

"உழவன்" "Uzhavan" said...

அருமை :-)
 
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

சே.குமார் said...

சத்ரியன்
போகி.இன்
ராமலெட்சுமி
தமிழரசி
செ.சரவணகுமார்
உழவன்

எல்லாருடைய வாழ்த்துக்கும் நன்றி,,,

சே.குமார் said...

சத்ரியன்
போகி.இன்
ராமலெட்சுமி
தமிழரசி
செ.சரவணகுமார்
உழவன்

எல்லாருடைய வாழ்த்துக்கும் நன்றி,,,

அண்ணாமலை..!! said...

ரசித்த தமிழ்ப்புத்தாண்டுக் கவிதை!