வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: வாங்கி வந்த வரம்..!

Friday, April 9, 2010

வாங்கி வந்த வரம்..!

ஏலே ராசு
எங்கடா போனே முண்டம்?
மாட்டை அவுக்காம...

இந்தா வாரேன் ....
குத்திய பம்பரம்
பாக்கெட்டுக்குள் நுழைய
எதேச்சையாய் இழுக்கப்பட்டது
பள்ளியில் கொடுத்த காக்கி டவுசர்..!

ஓடிய வேகத்தில்
கசாலைக்குள் நுழைய முடியாமல்
தடுத்தது மூச்சுக்குரல்..!

கட்டிய மாடுகளுக்கு
அந்தப் பக்கம்...
அப்பாகூட யாரோ....

மாட்டை அவிழ்க்க சென்றால்
அப்பா அடிப்பார்...
அவிழ்க்காமல் சென்றால்
அம்மா அடிப்பாள்...

யாரோ ஒருத்திக்கு முன்னால்
அடிவாங்குவதை விட
அடுக்களையில் வாங்கலாம்..!

என்னடா மாடவிழ்க்காம...?
கேள்வி முடியும் முன்...
அப்பா அங்கே.... பதிலாய்...

அவரு எதோ தப்பு பண்றாரு..?
நீ கேக்க மாட்டியா...?
கண்களில் கோபம் கண்ணீராய்...

அணைத்துக் கொண்டு
அவளும் அழுதாள்...
நான் வாங்கி வந்த வரமென்று...!


-'பரியன் வயல்' சே.குமார்
11 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நல்லா இருக்குங்க குமார்.!

//அவளும் அழுதாள்...
நான் வாங்கி வந்த வரமென்று...!//

இருவருக்குமான பதில்.!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

யதார்த்தமான வரிகள்.., ரொம்ப நல்லாருக்கு குமார்.

Sangkavi said...

//அணைத்துக் கொண்டு
அவளும் அழுதாள்...
நான் வாங்கி வந்த வரமென்று...!//

உண்மையான வரிகள்...

சே.குமார் said...

@ஷங்கர் said...
/////நல்லா இருக்குங்க குமார்.!

//அவளும் அழுதாள்...
நான் வாங்கி வந்த வரமென்று...!//

இருவருக்குமான பதில்.!/////

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..!

சே.குமார் said...

@ஸ்டார்ஜன் said...
//யதார்த்தமான வரிகள்.., ரொம்ப நல்லாருக்கு குமார்.//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..!

சே.குமார் said...

@சங்கவி said...
////அணைத்துக் கொண்டு
அவளும் அழுதாள்...
நான் வாங்கி வந்த வரமென்று...!//

உண்மையான வரிகள்...//
முதல் வருகைக்கும் முத்தான கருத்த்துக்கும் நன்றி நண்பரே...!

சத்ரியன் said...

//..........
.............
யாரோ ஒருத்திக்கு முன்னால்
அடிவாங்குவதை விட
அடுக்களையில் வாங்கலாம்..!//

குமார்,

’கண்களால் கண்பதும் பொய்’ - என்று எப்படிச் சொல்வது..?

குமாரின் சிறந்த கவிதைப் பட்டியலில் இன்னொன்று கூடிவிட்டது.

தமிழரசி said...

கடைசி பத்தி யாருக்காக அழுவதென யோசிக்க வைக்கிறது,,,

சே.குமார் said...

@ சத்ரியன் said...

//..........
.............
யாரோ ஒருத்திக்கு முன்னால்
அடிவாங்குவதை விட
அடுக்களையில் வாங்கலாம்..!//

குமார்,

’கண்களால் கண்பதும் பொய்’ - என்று எப்படிச் சொல்வது..?

குமாரின் சிறந்த கவிதைப் பட்டியலில் இன்னொன்று கூடிவிட்டது.

வருகைக்கும் தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கும் நன்றி சத்ரியன்.

சே.குமார் said...

@ தமிழரசி said...

// கடைசி பத்தி யாருக்காக அழுவதென யோசிக்க வைக்கிறது,,,//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழரசி.

அண்ணாமலை..!! said...

நண்பரே! நல்ல கவிதை!
நல்ல மனப்போராட்டங்கள்!
தொடருங்கள்!