வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: உயிர் 'கொல்லி'

Sunday, April 11, 2010

உயிர் 'கொல்லி'


சல்லாபிக்க நினைத்த
மனசு உல்லாசம் தேடியது..!

வாழ்க்கை வசந்தத்தில்
வாலிபத்தின் விருந்து..!

வாடகை உடம்போடு
கரைந்தது இரவு..!

எச்சத்தின் உச்சம்
தொடர்ந்த இரவோடு
தொலைந்தது நிம்மதி..!

கேட்டுப் பெற்றவள்
கேட்காமல்
கொடுத்துச் சென்றாள்.

-'பரியன் வயல்' சே.குமார்.
3 comments:

தமிழரசி said...

//கேட்டுப் பெற்றவள்
கேட்காமல்
கொடுத்துச் சென்றாள்.//

கொடுத்து செல்பவனும் உண்டு...விழிப்புணர்வு கவிதை..

சத்ரியன் said...

விஜய்,

விழித்துக் கொண்டே குழியில் விழுபவர்களுக்கு எங்கே புரியப்போகிறது?

"உழவன்" "Uzhavan" said...

சுருக்குனு சொல்லிடீங்க