வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: முகம் காட்டுவாயா அம்மா..!

Thursday, March 11, 2010

முகம் காட்டுவாயா அம்மா..!

இது 50வது படைப்பு. தொடர்ந்து எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் மூலமாகவும் தமிழிஷ், உலவு மற்றும் தமிழ்மணத்தின் மூலமாக வாக்கு அளித்தும் வாழ்த்துக்களை வழங்கும் தோழர், தோழியர்க்கும் நன்றி



அம்மா..
கனவுகளைச் சுமக்கும் எனக்குள்
உன் நினைவுகளைச் சுமக்க வைக்கிறாயே..!

பாட்டில் பாலும் கார்டூன் படமும்
கசப்பாய் இருக்கின்றன..!

ஒவ்வொரு இரவும் உனக்காய்
விழித்திருப்பேன் இமை மூடுவதறியாமல்..!

நீ எனக்கு நிலா காட்ட வேண்டாம்...
நிலா காட்டி சோறுட்ட ஆயா இருக்கிறாள்..!

நித்தம் கதை சொல்ல வேண்டாம்...
பழங்கதை சொல்ல தாத்தா இருக்கிறார்..!

கட்டியணைத்து முத்தமிட வேண்டாம்...
கடிந்து பேசினாலும் அவ்வப்போது
முத்தமிட அப்பா இருக்கிறார்..!

மாதர் சங்கமும் பொது நலமும் உனக்குப் பெருமை...
உன் முகம் கண்டால் எனக்கு இனிமை..

ஒரு முறை உன் முகம் காட்டி செல்வாயா..?
நினைவுகளின் சுமையை இறக்கி
உன் மலர் முகம் சுமந்து செல்கிறேன்..!

-'பரியன் வயல்' சே.குமார்.




10 comments:

சத்ரியன் said...

//பாட்டில் பாலும் கார்டூன் படமும்
கசப்பாய் இருக்கின்றன..!//

குமார்,

இனிக்கும் வரிகள்...!

(தமிழ் முகம் உள்ள படமாக இருந்த்திருந்தால் கவிதை இன்னும் மிளிரும்)

'பரிவை' சே.குமார் said...

நண்பர் சத்ரியனுக்கு,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்கள் விருப்பப்படி கவிதைக்கான படம் மாத்தியாச்சு.

அன்புடன் மலிக்கா said...

//நீ எனக்கு நிலா காட்ட வேண்டாம்...
நிலா காட்டி சோறுட்ட ஆயா இருக்கிறாள்//

இது எவ்வளவு வருத்தமான செயல் என்பது இதுபோன்ற தாய்களுக்கு உணர்கிறார்களோ இல்லையோ!

[நான்தவம் செய்திருக்கவேண்டும் இல்லையென்றால் இன்றளவும் எனக்கு இந்தபாக்கியம் [அம்மாகையால் ஊட்டுவது]கிடைத்திருக்குமா நான் கொடுத்துவைத்தவளே!]

வரிகளுக்கு வரிகள் உண்மையின் பிம்பம் மிளிர்கிறது பாராட்டுக்கள் குமார் அவர்களே..

vidivelli said...

நீ எனக்கு நிலா காட்ட வேண்டாம்...
நிலா காட்டி சோறுட்ட ஆயா இருக்கிறாள்..!

நித்தம் கதை சொல்ல வேண்டாம்...
பழங்கதை சொல்ல தாத்தா இருக்கிறார்..!

கட்டியணைத்து முத்தமிட வேண்டாம்...
கடிந்து பேசினாலும் அவ்வப்போது
முத்தமிட அப்பா இருக்கிறார்..!

மாதர் சங்கமும் பொது நலமும் உனக்குப் பெருமை...
உன் முகம் கண்டால் எனக்கு இனிமை..




கனதி நிறைந்த கவிதை.............
அருமையோ அருமை......
படிக்க படிக்க ஆவலாய் இருக்கிறது...........

கவி அழகன் said...

Nejai thoda kavaithai

'பரிவை' சே.குமார் said...

//[நான்தவம் செய்திருக்கவேண்டும் இல்லையென்றால் இன்றளவும் எனக்கு இந்தபாக்கியம் [அம்மாகையால் ஊட்டுவது]கிடைத்திருக்குமா நான் கொடுத்துவைத்தவளே!]//
மலிக்கா, தாய்மையின் மகத்துவம் அறியாமல் இன்று எத்தனை குழந்தைகள்.
உங்கள் தாயின் அன்பும் பாசமும் என்றென்றும் கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்,

'பரிவை' சே.குமார் said...

வருகைக்கும் உங்கள் ரசனைக்கும் நன்றி விடிவெள்ளி.

'பரிவை' சே.குமார் said...

முதல் வருகைக்கும் முத்தான வாழ்த்துக்கும் நன்றி யாதவன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

குழந்தையின் கனவுக்குள் நினைவாகவும்... நினைவுக்குள் கனவாகவும்...கலந்திடவும்.

எந்த பெருமையும் வேண்டாம்... உன்னை பெற்றதன் பெருமையை விட என்று அன்பினை பொழிந்திடவும்...

இறையிடம் என் வேண்டுதல்...

சிநேகிதன் அக்பர் said...

அருமை குமார்.

50 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்.