வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: பிரிவு தாகம்

Sunday, February 28, 2010

பிரிவு தாகம்

மார்கழிக் காலை...
மயக்கும் மாலை...
சுட்டெரிக்கும் பகல்...
சுகமான இரவு...
எல்லா நேரத்திலும்
என் அருகே நீ..!

எட்டிப் பிடிப்பது
கட்டிப் பிடிப்பதுமாய்...
இழுத்து அணைப்பதும்
இறுக அணைப்பதுமாய்...

எத்தனை முறை உன்
அணைப்புக்குள் சிக்கிக்
கொண்டாலும் மீண்டும்
கேட்கும் உன் கதகதப்பு..!

சிணுங்கலாய் கோபித்தாலும்
சில நேரமே விலகியிருப்பாய்...
தனித்திருக்க நினைத்தாலும்
தழுவலை நாடும் என் இதயம்...
நிஜமான கோபம் கூட
உன் முகம் பார்த்தால் நிழலாகும்...

இன்று நம் காதல்
செல்பேசி வழி சிணுங்கலும்
கணிப்பொறி வழி
முகம் பார்த்தலுமாய்...

உன் வரவு எனக்கு குறிஞ்சிப் பூவாய்...
என் வாழ்க்கை விட்டில் பூச்சியாய்...
-'பரியன் வயல்' சே.குமார்
4 comments:

vidivelli said...

நிஜமான கோபம் கூட
உன் முகம் பார்த்தால் நிழலாகும்...

ரொம்ப ரொம்ப பிடித்த வரிகள்.
மொத்தமாய்ச் சொன்னால் கவிதையே சுப்பர்.
தொடருங்கள்.........

என்ன நம்ம பக்கத்துக்கு காண கிடைகேல்ல...........

சத்ரியன் said...

//நிஜமான கோபம் கூட
உன் முகம் பார்த்தால் நிழலாகும்.//

குமார்,

அழகு வரிகள்...!

சே.குமார் said...

நன்றி விடிவெள்ளி... உங்கள் தளம் வருவேன். தங்கும் அறை மாற்றியதால் இண்டெர்நெட் இல்லை. அதான் நண்பர்களின் தளம் பார்க்கும் வாய்ப்பு இல்லை. விரைவில் வருவேன்.

நன்றி சத்ரியன் வருகைக்கும் வாழ்த்துக்கும்..!

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

இன்றே குறிஞ்சிப்பூ பூக்கட்டும்...
என்றும் மலர்ந்து இருக்கட்டும்...
அன்றுபோல் நிறைந்து மலரட்டும்... மனம் உங்கள் கவிபோல் படரட்டும்...