வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: மேய்ப்பன்..!

Saturday, February 6, 2010

மேய்ப்பன்..!


வெயில் தாங்காத எருமை...
மழை தாங்காத பசு...
இரண்டுக்கும் நான்
மேய்ப்பனாக..!

காட்டுக்கு ஒன்று
வீட்டுக்கு ஒன்று
கயிரை இழுத்ததால்
காலை வாரியது..!

அம்மா வருமுன்
ஆவலாய் வீட்டுக்குள்...
தாயைக் கண்ட கன்று
பசியோடு புசித்தது
தாயின் மடியில்..!

எருமையோடு போராடி
எதிர்க்க முயன்றும்
முடியாமல் உருவிவிட்டேன்
ஒடிச் சென்றது நீருக்குள்..!

கரையிலிருந்த நான்
சற்றே கண்ணயர்ந்தேன்...
அவசர கதியில்
எங்கோ சென்றது எருமை..!

தேடிக் கலைத்து
வெறுங்கையுடன்
வீடு வந்தபோது...

'எருமை மாடே'
பசுவை விட்டுட்டு என்ன
புடுங்கினாய்...
பாலெல்லாம் போச்சு..!

எருமை மாடு
எருமையை தொலைந்தது
தெரியாமல்...
பால் போன வேதனையில்
வெடித்தாள் அம்மா..!

-சே.குமார்
2 comments:

ஷங்கர்.. said...

அப்படி போட்டு தாக்குங்க..:))

நல்லா இருக்குங்க குமார்..:))

சே.குமார் said...

நன்றி ஷங்கர்.