வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: கொதிக்கும் மீன் ஆசை

Wednesday, February 10, 2010

கொதிக்கும் மீன் ஆசை


பக்கத்து வீட்டிலிருந்து வரும்
வாசத்தால் நாவில் உமிழ்நீர்...

ம்... குளத்து மீன் நல்லாயிருக்கும்
நமக்கெங்கே அது கிடைக்கிறது...

அவனவன் ஊர் கட்டுப்பாட்டை
மீறி களவாண்டு திங்கிறான்...

நாம வாசத்தை மோந்து
பார்த்து நோவ வேண்டியதுதான்...

மனைவியின் புலம்பலால்
நாளை நம்ம வீட்டிலும்
குளத்து மீன் கொதிக்கும்...

பாச்சை வலையை
யாரும் அறியா இரவில்
கட்டிவிட்டு வீடு வந்தான்...

நாளை குளத்துமீன் குழம்புக்கு
அம்மியில் மசாலா அரைத்து
சேர்த்து வைத்துவிட்டு
மகிழ்வுடன் படுக்கும் போது

'நேரத்துல கிளப்பிவிடு
ஆளுக எழும்புறதுக்குள்ள
வலை எடுக்கணும்...'

பாவம்..
இரவில் திடீர் மழை
பெய்யும் என்பதும்...

அதில் பாச்சை வலை
பாழாப்போகும் என்பதும்..

அறியாமல் மீன் ஆசையோடு
ஆழ்ந்த உறக்கத்தில்..

-சே.குமார்

9 comments:

சி. கருணாகரசு said...

அட... கவிதை நல்லாயிருக்குங்க... வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

அருமை.

மீன்துள்ளியான் said...

மீன் மட்டும் இல்லை குமார் .. மனுசனும் இப்படித்தான் நிறைய பேர் கிட்டே பொய் மாட்டிக்கிறான்

சே.குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சி.கருணாகரசு.

சே.குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலஷ்மி

சே.குமார் said...

ஆம் நண்பரே... உங்கள் கருத்து மிகவும் சரியானதே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மீன்துள்ளியான்.

கண்மணி/kanmani said...

குளத்து மீன் இல்லைன்னா கடல் மீன் :))))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

மீன் சாப்பிடும் ஆசையை ரொம்ப கிளப்பி விட்டுடீங்களே !

நல்லாருக்கு மீன் வாசம் .

சே.குமார் said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன். உங்கள் வருகை எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. அடிக்கடி வாங்க.