வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: அங்கும்... இங்கும்...

Saturday, February 20, 2010

அங்கும்... இங்கும்...

அங்கு:

வசீகரிக்கும் கண்கள்...
நீளமான மூக்கு...
புன்னகைக்கும் உதடுகள்...
அழகான மீசை...
அளவான தாடி...
பரந்த தோள்...
விரிந்த மார்பு...
மேவிய வயிறு...
கடைந்தது போல் கால்கள்...
எல்லாம் கனவாய்...
அருகில் குறட்டைவிட்டு
தூங்கும் ஒல்லிக் கணவன்..!

இங்கு:

மயிலிறகாய் நீண்ட கூந்தல்...
அழகிய நெற்றி...
கவரும் கருவிழி...
கூர்மையான நாசி...
ஆப்பிள் வதனம்...
வசீகரிக்கும் அதரம்...
சங்குக் கழுத்து...
உடுக்கை இடை...
எல்லாம் கனவாய்...
அருகில் குண்டு மனைவி..!

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்..?
3 comments:

மீன்துள்ளியான் said...

நல்ல ஏக்கம் வெளிப்படுகிறது

vidivelli said...

எல்லாம் கனவாய்...
அருகில் குறட்டைவிட்டு
தூங்கும் ஒல்லிக் கணவன்..!

உடுக்கை இடை...
எல்லாம் கனவாய்...
அருகில் குண்டு மனைவி..!

இறுதியில் போட்டு அசத்திட்டீங்களே.
நன்று......நன்று
செம்பகம்

சே.குமார் said...

நன்றி மீன்துள்ளியான்.

நன்றி விடிவெள்ளி.என் பெயர் சே.குமார். செண்பகம் அல்ல.