வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: புன்னகை பூ..!

Tuesday, February 16, 2010

புன்னகை பூ..!உன் வரவுக்காக
நினைவுகளின் துணையோடு
மதில் மேல் பூனையாய் நான்..!

வருவோர் போவோரின்
பார்வைகள் துளைத்தாலும்
தொலைக்காத நினைவுகளுடன்..!

நண்பர்கள் கச்சேரி
நடக்கும் அரசமரத்தடியில்
என் வரவிற்காக நட்பின் வட்டம்..!

குட்டிச்சுவற்றின் மீது
உன் வரவுக்காக
தவிக்கும் இதயத்துடன்
நட்பு மறந்து நான்..!

எதேச்சையாய் பார்த்த
அப்பாவின் நண்பர்
என்னப்பா குட்டிச்சுவரில் வாசம்
என்கிறார் கிண்டலாக..!

என் சுவாசத்திற்காக என்று
சொல்ல எத்தனித்த நாவை
கடித்துக் கொள்கிறேன்..!

அவர் பார்வையில் தெரிந்தது
என் அப்பாவிடம் வத்திவைக்க
இருக்கும் அவரின் நெஞ்சம்..!

எதையும் நினைக்காமல்
உன் நினைவாய் உன் வரவுக்காக..!

இதயமும் நொடியும்
மாறி மாறி துடிக்க...
வழி மேல் விழி வைத்து...

தோழியருடன் நிலவாய் நீ...
எதேச்சையாய் பார்ப்பதுபோல்
பார்த்தாய்... பின் பூத்தாய்...
மலருமுன் மறைந்து விட்டாய்..!

புன்னகையால் பூத்த இதயத்துக்குள்
உன் நினைவோடு நண்பர்களை
நோக்கி பயணிக்கும் என்னைவிட
மின்னலாய் மனது...

 உன் புன்னகையை
அவர்களிடம் பூக்கவிட..!

-சே.குமார்
5 comments:

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு

வாழ்த்துக்கள்...

சே.குமார் said...

நன்றி கமலேஷ்

சே.குமார் said...

Congrats!

Your story titled 'நெடுங்கவிதைகள்: புன்னகை பூ..!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th February 2010 10:35:04 AM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/187382

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

வாக்களித்த நட்புக்கும் வாய்ப்பளித்த தமிழிஷ்க்கும் நன்றி...

vidivelli said...

very very nice this poem.good.
sempakam

sweetprabha said...

உன் வரவுக்காக
நினைவுகளின் துணையோடு.......
supper...
so sweet..