வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: இனிக்காத காதல்

Wednesday, May 12, 2010

இனிக்காத காதல்
உப்புச் சப்பில்லாத
விஷயங்களுக்கெல்லாம்
உன்னிடம் கோபம்..?

எட்ட இருந்து ரசிக்க
எத்தனித்த இதயத்தை
கிட்ட இருந்து இம்சிக்கும்
இதயமில்லா மனிதன் நீ..!

வசதிகளைக் குறைத்து
உன்னுள் வாழக் கற்றுக்
கொண்ட எனக்கு
வாழ்க்கையில் துயரத்தை
மட்டுமே தூண்டில்
புழுவாய் தந்தவன் நீ..!

எனக்காக என்றில்லாமல்
உனக்காக மட்டுமே நானாக
இருந்த போதும்
என் நட்பு வட்டத்தையும்
நஞ்சாய் பார்ப்பவன் நீ..!

உன் சுற்றமும்
என் சுற்றாமும்
வேறல்ல என்ற எனக்குள்
சுற்றத்தை மறக்கச்
சொன்ன பாவி நீ..!

காதலை காதலிக்கத்
தெரியாத உன்னை
காதலித்த காதல் நான்..!

எனக்குள் இப்பொழுதெல்லாம்
காதலித்த தருணங்களின்
கடைசி நொடி வரை
மட்டுமே நீ நீயாக..!

காதலித்தபடியே
கடந்திருந்தலோ...
மரணித்திருந்தாலோ...
காதல் இனித்திருக்குமோ..?

-'பரிவை' சே.குமார்
10 comments:

’மனவிழி’சத்ரியன் said...

//எனக்காக என்றில்லாமல்
உனக்காக மட்டுமே நானாக
இருந்த போதும்
என் நட்பு வட்டத்தையும்
நஞ்சாய் பார்ப்பவன் நீ..!//

குமார்,

நஞ்சாகிய காதல்!

ராமலக்ஷ்மி said...

//காதலை காதலிக்கத்
தெரியாத உன்னை
காதலித்த காதல் நான்..!//

நல்லாயிருக்குங்க.

முடிவும் அருமை.

Sangkavi said...

//காதலித்தபடியே
கடந்திருந்தலோ...
மரணித்திருந்தாலோ...
காதல் இனித்திருக்குமோ..?//

அழகான ஆழமான வரிகள்....

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு குமார்.

சே.குமார் said...

@ ’மனவிழி’சத்ரியன் said...
//எனக்காக என்றில்லாமல்
உனக்காக மட்டுமே நானாக
இருந்த போதும்
என் நட்பு வட்டத்தையும்
நஞ்சாய் பார்ப்பவன் நீ..!

குமார்,

நஞ்சாகிய காதல்!//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சத்ரியன்.

சே.குமார் said...

@ ராமலக்ஷ்மி said...
//காதலை காதலிக்கத்
தெரியாத உன்னை
காதலித்த காதல் நான்..!//

நல்லாயிருக்குங்க.

முடிவும் அருமை.//

நன்றி சகோதரி

சே.குமார் said...

@ Sangkavi said...
//காதலித்தபடியே
கடந்திருந்தலோ...
மரணித்திருந்தாலோ...
காதல் இனித்திருக்குமோ..?//

அழகான ஆழமான வரிகள்....//


கருத்துக்கு நன்றி சகோதரா.

சே.குமார் said...

@ பா.ராஜாராம் said...
//நல்லாருக்கு குமார்.//

நன்றி ராஜாராம் அண்ணா.

கமலேஷ் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...வாழ்த்துக்கள்...

karthiga said...

very nice