வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: தொலையாத ஞாபகம்..!

Wednesday, March 17, 2010

தொலையாத ஞாபகம்..!


பிறந்த மண்ணில் கால் பதித்தபோது
ஞாபகத்தில் ஞாபகமாய்...

ஒற்றைப்பனையும்... குட்டைப்பனையும்...
கோணப்பனையும்... சதைக்காச்சியும்...

இனிப்புப்புளியும்... கரும்புளியும்...
வத்தக்காச்சியும்... சுடுகாட்டுப்புளியும்...

கெழுத்திமீனும்... கெண்டைமீனும்...
விரால்மீனும்... அயிரைமீனும்...

பரந்த கண்மாயும்... விளைந்த வயல்வெளியும்...
நீரோடும் வாய்க்காலும்... முண்டாசு மனிதர்களும்...

ஓட்டு வீடும்... ஒத்த வீடும்...
வயலார் வீடும்... அம்பலார் வீடும்...

ராசுமாமாவும்... மீசைமாமாவும்...
கட்டையனும்... குட்டையனும்...

காளி ஆயாவும்... கண்ணம்மா பாட்டியும்...
அழகம்மா அக்காவும்... ராஜாத்தியும்...

கருத்தப் பசுவும்... வெள்ளச்சி எருமையும்...
செம்மறி ஆடும்... பாசமுள்ள ராஜா நாயும்...

மாரியம்மன் கோயிலும்... கருப்பண்ணசாமி வீடும்...
கம்மாக்கரை முனியும்... மரத்து நாகரும்...

காதலை விதைத்த வன்னி மரமும்
விதையை வீசிய வேள்விழியாளும்...

வாழ்க்கையை கற்றுக் கொடுத்த காதலும்...
வாழக் கற்றுக் கொடுத்த மனிதர்களும்...

தொலைந்த எல்லாம் ஞாபகமாய்...
தொலையாமல் என் சிறிய இதயத்துக்குள்...

-'பரியன் வயல்' சே.குமார்.




4 comments:

vidivelli said...

அப்பபப்பா சும்மா இல்லை.........
மறக்காமல் வைச்சிருக்கிறீகளே அதுவே போதும்.....
சுப்பருங்க!!!!!!

Anonymous said...

கிராமத்து வாசனை கவிதையில் அத்தனைக்கும் ஆசைபடும் மனசு ஏங்கம் மட்டுமே வெளிப்படுகிறது பெருமூச்சாய்....

'பரிவை' சே.குமார் said...

எப்படி மறக்கும் விடிவெள்ளி.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

'பரிவை' சே.குமார் said...

முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி தோழி தமிரசி.