வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: ஜாதீய தாகம்

Tuesday, February 23, 2010

ஜாதீய தாகம்


ஜாதிக்கொரு சங்கம்...
வீதிக்கொரு பலகை...

கோயில் பிரச்சினை
கும்பிடும் ஐயனாருக்கு
ஜாதிக்கொரு பூட்டு..!

பூட்டுச் சிறைக்குள் சிலைகள்
வேதமந்திரம் வீதியில்..!

திருவிழா நடத்த
தீர்மானித்த கூட்டத்தில்
முன்னோடியாய் ஜாதி..!

அருவாளும் கத்தியும்...
கம்பும் கற்களும்...
அவசர வேலையில்...

உயிருக்குப் பயந்து
சிதறிய மனிதர்களின்
செருப்புகள் சிதறியிருந்தன
ஜாதி அறியாமல்..!

சிதறிய ரத்தம் எல்லாம்
சிவப்பாய்...
ஜாதியின் பெயரோ...
வீதியின் பெயரோ...
அறியாமல் கலந்து..!

அடிபட்டாலும் மனசுக்குள்
எரிந்து கொண்டுதான்
இருந்தது ஜாதீய தீ..!

என்று தணியும் இந்த
ஜாதீய தாகம்..?

-'பரியன் வயல்' சே.குமார்.




3 comments:

Unknown said...

சிதறிய ரத்தம் எல்லாம்
சிவப்பாய்...
ஜாதியின் பெயரோ...
வீதியின் பெயரோ...
அறியாமல் கலந்து..!

// நல்ல அற்புதமான வரிகள்
தொடாருங்கள் தொடர்கிறேன்
அன்புடன்
தேவராஜ் விட்டலன்//
http://vittalankavithaigal.blogspot.com/
vittalan@gmail.com

vidivelli said...

supper..........
good poem.........

துபாய் ராஜா said...

//உயிருக்குப் பயந்து
சிதறிய மனிதர்களின்
செருப்புகள் சிதறியிருந்தன
ஜாதி அறியாமல்..!

சிதறிய ரத்தம் எல்லாம்
சிவப்பாய்...
ஜாதியின் பெயரோ...
வீதியின் பெயரோ...
அறியாமல் கலந்து..!

அடிபட்டாலும் மனசுக்குள்
எரிந்து கொண்டுதான்
இருந்தது ஜாதீய தீ..!

என்று தணியும் இந்த
ஜாதீய தாகம்..?//

அருமை நண்பரே... கேள்விக்கு பதில் கிடைக்க இன்னும் எத்தனை தலைமுறை ஆகுமோ... :((