கடந்து சென்ற காலங்களில்
காட்டுத்தீயாய் எனக்குள் நீ..!
உன் முதுகில் நான் செய்த சவாரி
என் மகனுக்கு கிட்டவில்லை...
இயந்திரமான உலகில்
இயந்திரச் சைக்கிளில் அவன்..!
உன் கைபிடித்து நான்
நடந்த தருணங்கள்
உனக்களித்த சந்தோஷம்
எனக்கு கிட்டவில்லை...
பள்ளிப் பேருந்தில் அவன்..!
எனக்கும் உனக்கும்
ஆறுதலளித்த நம் அருகாமை
எங்களுக்குக் கிட்டவில்லை
ஹாஸ்டலில் அவன்..!
எல்லோரிடமும் சகஜமாய்
பேசும் அவன்
என்னிடம் செல்பேசியில்
பேசினாலும் அளவோடு..!
உனக்கும் எனக்குமான நட்பில்
அன்பிற்கு எல்லை இல்லை...
அவனுக்கும் எனக்குமான நட்பில்
புன்னகைக்கும் எல்லை உண்டு..!
நீயும் நானும்
பாசத்தின் அடிமைகள்...
அவனும் நானும்...?
-சே.குமார்
6 comments:
150வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
எப்படி இதனை வலைப்பூவை manage பண்றேங்க Great
வாழ்த்துக்கு நன்றி சிவாஜி சங்கர்.
ஆர்வத்தில் ஆரம்பித்து இதுவரை தொய்வில்லாமல் போகிறது. நண்பர் சரவணக்குமார் கூட ஒருமுறை ஒரே வலைப்பூவாக மாற்றுங்கள் என்று தெரிவித்திருந்தார். பார்க்கலாம் இப்படியே போகுமா அல்லது ஒன்றாகுமாஎன்று.
நூற்றி ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் குமார்.. :))
ஒரே பக்கத்தில் மொத்தமாய் படைப்புகளை வெளியிட்டு பின்னர் மற்ற பக்கங்களில் அவைகளை வகை படுத்திவிட்டால் வாசிப்புக்கும் எளிதாக இருக்கும். ஒரே பக்கத்தை நண்பர்களும் பின்தொடர ஏதுவாக இருக்கும். :))
//நீயும் நானும்
பாசத்தின் அடிமைகள்...
அவனும் நானும்...?//
:)))))))))))
மிக அருமை.
உணர்வுகளைச் சொன்ன விதம் அற்புதம்.
150ஆவது பதிவுக்கு சிறப்பு சேர்க்கும் கவிதை.
நன்றி சங்கர். ஒரே தளத்தில் கொண்டு வரும் யோசனையில்தான் இருக்கிறேன். கொஞ்சநாள் போகட்டும் பார்க்கலாம்.
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சங்கவி.
முதல் வருகைக்கும் உணர்வுப்பூர்வமான வாழ்த்துக்கும் நன்றி ராமலஷ்மி.
Post a Comment