கிறுக்கிய டைரி...
காலங்கள் கடந்தாலும்
தாள்கள் வெளுத்தாலும்
நினைவுகள் வெளுக்காமல்..!
பெட்டியின் அடியில்
பொக்கிஷமாய்...
எதோ தேடும் போது
எட்டிப்பார்த்தது..!
எடுத்துப் பிரித்தால்
நட்பின் வாசம்...
நட்புக்குள் பகை...
கல்லூரிக் கட்டுரைப் போட்டி...
கட் அடித்துச் சென்ற சினிமா...
மாணவர்கள் சண்டை...
அண்ணனின் திருமணம்...
தாத்தாவின் மரணம்...
ஊருக்கு வந்த தார்ச்சாலை...
பஞ்சாயத்து தொலைக்காட்சி...
கோவில் திருவிழா...
காதலின் வாசம்...
காதலியின் பரிசம்...
காதலியின் முத்தம்...
முதல் அரியர்...
முதல் சிகரெட்...
முதல் சேவிங்...
முறிந்த காதல்...
எல்லாம் எழுத்தாய்
பார்த்தபோது...
என்னுள் உணர்ச்சியின்
உந்துதலால்
கண்ணீரின் ஊர்வலம்..!
-சே.குமார்.
4 comments:
நெகிழ்வான கவிதை குமார்.
திரும்பி பார்த்தலே ஒரு சுகம்தான்.
வாழ்த்துக்கு நன்றி பா.ராஜாராம்
ரொம்ப நல்லா இருக்கு குமார்..உங்களோட நெடுங்கவிதைகளில் இது எனக்கு மிகவும் பிடித்தது..:)
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி பலா பட்டறை.
Post a Comment