வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: காதல் பிரிவு
Showing posts with label காதல் பிரிவு. Show all posts
Showing posts with label காதல் பிரிவு. Show all posts

Sunday, February 28, 2010

பிரிவு தாகம்

மார்கழிக் காலை...
மயக்கும் மாலை...
சுட்டெரிக்கும் பகல்...
சுகமான இரவு...
எல்லா நேரத்திலும்
என் அருகே நீ..!

எட்டிப் பிடிப்பது
கட்டிப் பிடிப்பதுமாய்...
இழுத்து அணைப்பதும்
இறுக அணைப்பதுமாய்...

எத்தனை முறை உன்
அணைப்புக்குள் சிக்கிக்
கொண்டாலும் மீண்டும்
கேட்கும் உன் கதகதப்பு..!

சிணுங்கலாய் கோபித்தாலும்
சில நேரமே விலகியிருப்பாய்...
தனித்திருக்க நினைத்தாலும்
தழுவலை நாடும் என் இதயம்...
நிஜமான கோபம் கூட
உன் முகம் பார்த்தால் நிழலாகும்...

இன்று நம் காதல்
செல்பேசி வழி சிணுங்கலும்
கணிப்பொறி வழி
முகம் பார்த்தலுமாய்...

எனக்கு
உன் வரவு 
குறிஞ்சிப் பூவாய்...
என் வாழ்க்கை
விட்டில் பூச்சியாய்...
-'பரியன் வயல்' சே.குமார்